வெள்ளிக்கிழமை, சதுர்த்திதிதி, மார்கழி மாதவளர்பிறை சஷ்டி ஆகியநாட்களில் விரதமிருந்துஅவரை வழிபட்டால்அனைத்துவிதமானநன்மைகளை பெறலாம்.
விநாயகரை அவிட்டநட்சத்திரத்தன்றுநெல்பொரியால்அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப்பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்தால் திருமணத்தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அவிட்டநட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும்விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதைகுழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம்அடையலாம்.
விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலைஅருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்குஉணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில்வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய்எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய்,விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால்பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள்ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.
செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்றுவிநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல்பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்துஉதவி புரிவார்கள். மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்குபால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம்,இடமாற்றம் போன்றவை நடக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால்செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால்அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும்இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள்.செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்திசனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக்கருதப்படுகிறது.
இந்த விரதத்தை பார்வதி தேவியிலிருந்து, பஞ்சபாண்டவர்கள்வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம்இருந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக