சனி, 12 அக்டோபர், 2013

சோற்றுக்கற்றாழை

 Aloe typica = Aloe deltoideodonta



சோற்றுக்கற்றாழை:

தாவரவியல் பெயர்: Aloe typica = Aloe deltoideodonta

சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை. நமக்கும் அழகுதரும் மூலிகை. சோற்றுக்கற்றாழை = சோறு + கற்றாழை. பஞ்சகாலங்களில் உணவாகப் பயன்படுத்தப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது. குமரி என்று சொல்லப்படும் சோற்றுக்கற்றாழையை தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதைப்பத்தை சாப்பிட்டு வருவதால் வியாதிகள் குணமாகும். சோற்றுக்கற்றாழை எனத் தமிழிலும் அலோவேரா(aloe Vera  என ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் அருமருந்து, பெருமருந்து, மானிடத்துக்கே அது ஒரு அரிய விருந்து.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பலவகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.

சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்திறமை என்னவென்றால் இதன் சாற்றின்
சில குறிப்பான அணுக்கூறுகள் உள்ளன. இந்த அணுக்கூறு, நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்களில் உள்ள சில ரிசெப்டர்கள் (விரும்பி வரவேற்கும்) மிகவும் ஒத்தவையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழை சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கை பலமாக தொடங்கி விடுகிறது. நம் உடல் செல்கள், கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றன. இதனால் உடல் பலவிதத்தில் சுத்திகரீக்கப்படுகிறது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றன.

மருத்துவக் குணங்கள்


1. கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.

2. உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

3. கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

4. இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

5. கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்

6. காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம் சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்; உடல் பருக்காமலே.பலகீனம் மறையும் தாதுவிருத்தி ஏற்படும். பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்கூட இதை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்.

7. சோற்றுக்கற்றாழை + வெள்ளைப்பூண்டு + பனங்கற்கண்டு + எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து [தோராயமான அளவுகளில்] காய்ச்சி வடித்து எண்ணெயை குடல்; வயிறு தொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும்.

8. கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.

9. வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும்.

10. இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.

11. சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.

12. சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.

13. வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும். இந்த சோற்றுக் கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

14. சோற்றுக் கற்றாழையின் சோறு 7முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச்சாறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறு‌ந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும். நீடித்த மலச்சிக்கலைப் போக்குவதில் மிகவும் சிறப்பானது.
15. செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும்.

16. இதும‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.

17. இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
18. எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும். வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும், புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.

19. வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நாயுருவியின் மருத்துவ குணங்கள்


நாயுருவி

By M.sachidhanandham
 

வேலுக்கு பல் இருகும்
வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே
ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்".


நாயுருவி (Achyranthes aspera) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.


எதிர் அடுக்குகளில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி இனமாகும். இது இரண்டு அடி வரை வளரக் கூடியது. இதன் தண்டு, காம்பு செந்நிறம் உடையதாக இருக்கும். இதன் எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் உடையவை. சிறுநீர் பெருக்கவும், நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தவும், சதை, நரம்புகளைச் சுருங்கவும் செய்யும் மருத்துவக் குணம் உண்டு. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் தானாகவே வளர்கின்றது.

தெருவோரங்களில் தானே வளர்ந்து காணப்படும் நாயுருவிச்செடி ஹோமத்தில் எரிக்கவும் பயன்படும் தெய்வீக மூலிகை. 

 ஹோம் வளர்க்கும் ஒன்பது வகை விறகுக் குச்சிகள், அவை : (1) முருக்கு, (2) கருங்காலி, (3) நாயுருவி, (4) அரசு, (5) அத்தி, (6) மா, (7) வன்னி, (8) ஆல், (9) இத்தி என்பன.
                                                   
இதில் இருந்து நாயுருவி வேத காலத்தில் இருந்து மனித பயன் பாட்டில் இருந்து வந்தது தெரிகிறது.

Common name: Prickly Chaff Flower, Chaff-flower, Crocus stuff, Crokars staff, Devil's horsewhip • Hindi: चिरचिटा Chirchita, लटजीरा Latjira • Manipuri: খুজুম্পেৰে Khujumpere • Sanskrit: अपामार्ग Apamarga
Botanical name: Achyranthes aspera    Family: Amaranthaceae (Amaranth family)


வேறு பெயர்கள்: அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி.
 
செந்நாயுருவி என்னும் இந்தவகையின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும். மருத்துவக் குணம் பெரும்பாலும் இதற்கு அதிகமாகவே காணப்படுகின்றது. ஆங்கிலத்தில் இதை Achyranthes aspera, Amarantaceze

மலச்சிக்கல், பசியின்மை, செரிக்காமை (அசீரணம், அறாமை) போன்றவற்றுக்கு மருந்தாகிறது
பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், மூலம், இருமல், தோல் அரிப்பு, உடற் சுறுசுறுப்புக் குறைதல், தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
தேள் கடியினாற் பாதிக்கப்பட்டோரைக் குணமாக்க நாயுருவியின் இலைச் சாறு பயன்படுகிறது.

காதுவலி, பல்வலி, சிறுநீரடைப்பு போன்றவற்றுக்கான மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.

பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி என்னும் அற்புத மூலிகை ஆகும்.

நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். நாயுருவி பற்பொடியும் தயாரித்துக்கொள்ளலாம்.

நாயுருவிச்செடியினால் பல் துலக்கமுக வசீகரம் பெறும். நாயுருவி பற்பொடி செய்யவும் பயன் படுகிறது .இதில் பலபோடி செய்து வியாபாரம் செய்யலாம் .சிறந்த வாய்ப்பு உள்ளது .பல் துலக்கதவர்கள் யார் ? எனவே உபயோகிப்போர் அதிகம் .பொருள் மிகுந்தோர் நாயுருவி டூத் பேஸ்ட் செய்து உலக சந்தையை குறிவைக்கலாம் .  வளமான தமிழன் தான் வலிமையான தமிழன் .

பல் போடி செய்யும் முறை
நாயுருவி வேர் - 100 கிராம்
கடுக்காய் - 50 கிராம்
நெல்லிக்காய் - 50 கிராம் 
தான்றிக்காய் - 50 கிராம்
ஏல அரிசி - 20 கிராம்
கிராம்பு - 50 கிராம்
சுக்கு - 50கிராம்
கருவேலப்பட்டை - 50கிராம்
இந்துப்பு - 50 கிராம்

உலர வைத்து தூசி, கொட்டை நீக்கி பொடி செய்து மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். இதைக்கொண்டு தினமும் இரு முறை பல் துலக்கி வர பல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் பற்கள் பளபளவென மின்னும்.
இன்னொரு விந்தையான குணம் நாயுருவிக்கு உண்டு .இதை சித்தர்கள் ரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்தனர் .

நாயுருவி  கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது .எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ,உணவுக்காக நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனிதர் கண்ணில் படாமல் இருக்க இயலும் .

நாயுருவி இலைகளில்  அதி காலையில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.

நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும்.

நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.

நாயுருவி இலையோடு குப்பை மேனி இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிபட்ட வாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும்.

நாயுருவி வேர்ப்பட்டை, மிளகு சம அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். நாயுருவி விதையை 10 கிராம் எடுத்து அரைத்து 2 வேளை 2 நாட்கள் சாப்பிட்டு வர பேதி நிற்கும்.

நாயுருவி விதையை நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 20 கிராம் எடுத்து, துத்திக் கீரையை வதக்கும் போது சேர்த்து உணவுடன் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூலமும் குணமாகும். நாயுருவி விதையைச் சோறு போல சமைத்து உண்ண பசி எடுக்காது. ஒரு வாரம் ஆயாசம் இல்லாமல் இருக்கலாம். பின்னர் மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்க பசி உண்டாகும்.

நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கப் பல் தூய்மையாகி முகம் வசீகரம் ஆகும். நாயுருவி சமூலமும், வாழைச் சருகும், மூங்கில் குருத்தும் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு 400 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 200 மில்லியளவு 2 வேளை குடிக்க, பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும்.

நவ கிரகத்தில் நாயுருவி புதன் கிரகத்தை குறிக்கும்   புதன் கிரகத்திற்குக் கோவில் ஒன்று அமைத்து பகவானுடன், ஞானாதேவி, நாயுருவி செடி, இம்மூன்றையும் ஒரே சமயத்தில் வணங்குகின்றார்கள். இதனால் இக்கிரகத்தின் நன்மைகள் கிடைக்கும் என்றும், உயிரைக் குடிக்கும் நோய்களான கிட்னி ஃபெயிலியர், எய்ட்ஸ் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் நம்புகின்றனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகில் உள்ள விநாயகபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் புதன் பகவானுடன், ஞானாதேவி அம்மன் மற்றும் நாயுருவி செடியைச் சேர்த்து ஒரே சமயத்தில் காலை, மாலை இரண்டு வேளைகள் பூஜை செய்யப்படுகின்றன. புதன் பகவான் கோவில் இங்கு தனியாக அமைந்திருக்கிறது.

விதையை  சாப்பிட்டால் ஒரு வாரம்வரை பசி இருக்காது. மீண்டும் பசி எடுக்க, சிறிதளவு மிளகு எடுத்து அதை வறுத்து இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.

 20 கிராம் விதையை பவுடராக்கி துத்திக் கீரையில் கொதிக்க வைத்து காலை உணவில் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூலம் குணம் பெறும்.

10 கிராம் விதையை அரைத்து இரண்டு வேளை சாப்பிட்டால் பேதி குணம் பெறும். சிவப்பு, வெள்ளை நிறம் இரண்டு வகை நாயுருவி இருக்கின்றன. இரண்டும் பயன்படுத்தலாம்.

முலிகை மர்மங்கள்

">

கேழ்வரகின் பயன்

கேழ்வரகின் பயன்



கேழ்வரகின் பயன்
கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்துகள் அதிகம்உள்ளதுபாலில் உள்ளகால்சியத்தை விடகேழ்வரகில் அதிககால்சியத்தைகொண்டுள்ளது.  கேழ்வரகைதினமும் உணவில் சேர்த்தால்உடல் வலுபெறும்நோய்எதிர்ப்பு சத்தியைஅதிகரிக்கிறதுஉடல் சூட்டை தனிக்கும்குழந்தைகளுக்கு   கேழ்வரகுடன்பால்சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம்இது  குழந்தைவளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும்.மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வரமாதவிடாய்  பிரச்சனைகள் தீரும்அதிக எடை இருப்பவர்கள் எடையைகுறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம்இது உடல் எடையைகுறைக்கும்.  கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது.சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகைஅடைபுட்டாகசெய்து சாப்பிடலாம் .கூழ் அல்லது  கஞ்சியாக சாப்பிடக்கூடாதுஇதை கூழாக செய்து குடித்தால்கொலஸ்டிரால் குறையும்.


இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால்தடுக்கிறதுஇதில் அதிக அளவு கால்சியம்இரும்பு சத்து உள்ளனகர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம்குடலுக்குவலிமை அளிக்கும்உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகுஇதில் புரதம்தாது உப்பு,சுண்ணாம்புச் சத்துஇரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும்  இருக்கின்றனகேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும்நீரிழிவுநோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்

கத்தரிக்காயின் நன்மைகள்

கத்தரிக்காயின் நன்மைகள்







கத்தரிக்காயின் நன்மைகள்

எல்லா நாட்களிலும் அனைத்து இடங்களிலும் மிக சாதாரணமாகக் கிடைக்கும் கத்தரிக்காக்கு சிறந்த மருத்துவகுணங்கள் உள்ளன.
  •  ரத்தத்தில் உள்ள கொழுப்பின்அளவைக் குறைப்பதில்கத்தரிக்காய் முக்கியப் பங்குவகிக்கிறது. 100 கிராம்கத்தரிக்காயில் 24 சதவிதம்கலோரிகள், 9 சதவிதம்நார்ச்சத்து உள்ளது.
  • அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின்எனப்படும் திரவப் பொருள் உள்ளதுஆந்தோசயான் உடல்ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும்.
  • 'பிகாம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட்,பைரிடமாக்சின்தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும்கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.
  • மாங்கனீசுதாமிரம்இரும்புபொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள்அதிக அளவில் உள்ளன.
  • கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும்,வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.


திருநீறு அணிவது எதற்காக?

திருநீறு பண்டையகாலத்திலேயேமுக்கியத்துவம்பெற்றிருந்ததுதிருநீறுஅணிவது சைவர்களதுஆன்மிக அடையாளச்சின்னம் என்கிற அளவில்மட்டும் எடுத்துக்கொள்ளாமல் திருநீறுஅணிவதன் உண்மையானபொருளை அறிந்து கொள்வதுஆன்மிக அன்பர்களுக்கு மிகஅவசியமாகும்.
முதலில் எரிக்கப்படும் எல்லாப் பொருள்களின் சாம்பலுமே திருநீறாககருதப்படுவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.ஆதிகாலத்தில் ஹோமத் தீயில் தனிச் சிறப்பு வாய்ந்த மரக்கட்டைகள்,நெய் மற்றும் மூலிகைகள் போடப்பட்டு கடைசியில் மிஞ்சும் சாம்பலேபுனிதத் திருநீறாகக் கருதப்பட்டது.
பிற்காலங்களில் ஹோமத்தீயின் மூலமாக மட்டும் அல்லாமல் பசுவின்சாணம் மற்றும் சில பிரத்தியேகப் பொருட்கள் கலந்த கலவையின்சாம்பலும் திருநீறாக பயன்படுத்தப்பட ஆரம்பித்ததுதிருநீறு அணிவதற்குஆன்மிகம் மற்றும் அறிவு பூர்வ மான காரணங்கள் இருக்கின்றன.முதலில் ஆன்மிக காரணங்களைப் பார்ப்போம்.
திருநீறு நிலையாமையை உணர்த்தும் அரிய பொருளாய் உள்ளது.அதாவது இறைவன் கொடுத்திருக்கின்ற இந்த மானிட உடலானதுஉறுதியாய் ஒரு நாளைக்கு இத்திருநீற்றைப் போன்று சாம்பலாய்ப்போகும்,அதை மறந்து விடாமல் தூய்மையாகஅறநெறியில்இறைச்சிந்தனையோடு வாழ வேண்டுமென ஒவ்வொரு கணமும்உணர்த்தும் விதமாக திருநீறு அணியப்படுகிறது.
மேலும் ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின்எஞ்சுவது இது தான் என்பதையும் திருநீறு குறிக்கின்றதுஇப்படிஅணிகிறவர்களுக்கும்அதைப் பார்க்கிறவர்களுக்கும் பெரும் தத்துவத்தைநினைவுபடுத்துவது திரு நீறு அணிவதன் முக்கிய நோக்கம்திருஞானசம்பந்தர் பாண்டிய மன்னன் கூன்பாண்டியனின் நோயைத் திருநீறு பூசிப்போக்கியதாக கூறப்படுகிறது.
திருநீற்றை முறையாக உச்சிநெற்றிமார்புநாபிவலது முழந்தாள்,இடது முழந்தாள்வலது தோள்இடது தோள்வலது முழங்கைஇடதுமுழங்கைவலது மணிக்கட்டுஇடது மணிக்கட்டுவலது விலாஇடதுவிலாமுதுகுகழுத்து என்று பதினாறு இடங்களில் அணிய வேண்டும்என்று சைவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
இதன்வழியாக இறைவனே நம் உடல் முழுவதையும் காக்கின்றான்என்பது அன்றைய சைவப் பெரியார்களின் கருத்தாக இருந்ததுஆனால்குறைந்தபட்சம் நெற்றியிலாவது திருநீறு அணியும் வழக்கம் இன்று வரைதொடர்கிறது.

திருநீறு பூசுவதன் தத்துவங்களைப் புரிந்து கொண்டு முறையாக செய்தால்நம் சிந்தனைகள் சீர்படும்மனம் ஒருநிலைப்படும்எதையும் எளிதாகவும்தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியும்காரிய சித்தி உருவாகும்,தடையற்ற இறைச் சிந்தனைஉயர்ந்த நற்குணங்கள்பாவங்கள் எனவரையறுக்கப்பட்டவைகளை ஒதுக்கும் மனப்பாங்கு அமையும்என்பதெல்லாம் முன்னோர் அனுபவம்

விநாயகரை வணங்குவதற்கு ஏற்ற விரத நாட்கள்

வெள்ளிக்கிழமைசதுர்த்திதிதிமார்கழி மாதவளர்பிறை சஷ்டி ஆகியநாட்களில் விரதமிருந்துஅவரை வழிபட்டால்அனைத்துவிதமானநன்மைகளை பெறலாம்.
 விநாயகரை அவிட்டநட்சத்திரத்தன்றுநெல்பொரியால்அர்ச்சனைஅபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப்பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்தால் திருமணத்தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்அவிட்டநட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும்விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதைகுழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம்அடையலாம்.
 விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலைஅருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்குஉணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியும்சென்ற வேலையில்வெற்றி உண்டாகும்உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய்எண்ணெய்நல்லெண்ணெய்இலுப்ப எண்ணெய்,விளக்கெண்ணெய்பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால்பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள்ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.
 செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும்பூச நட்சத்திரத்தன்றுவிநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல்பெருகி விவசாயம் தழைக்கும்உறவினர்கள் மனம்மகிழ்ந்துஉதவி புரிவார்கள்மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்குபால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம்,இடமாற்றம் போன்றவை நடக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால்செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால்அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள்மீண்டும்இழந்த பதவியையும்மனநிம்மதியையும் பெறுவார்கள்.செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்திசனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக்கருதப்படுகிறது.
 இந்த விரதத்தை பார்வதி தேவியிலிருந்துபஞ்சபாண்டவர்கள்வரை கடைப்பிடித்துள்ளனர்சிவபெருமானும் இந்த விரதம்இருந்துள்ளார்.

கருடனை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும்

கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும்.
கருடனின் அழகிய இறக்கைகளே யக்ஞங்கள் என்றூம், மந்திரங்களில் சிறந்த காயத்திரியே கருடனின் கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய சிரசு என்றும், சாம வேதம் அவனுடைய உடல் என்றும் சாமவேதம் குறிப்பிடுகிறது.
எந்தந்த நாளில் கருடனை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:
ஞாயிற்றுக்கிழமை: நோய்கள் நீங்கும்
திங்கட்கிழமை : சுகங்கள் கிடைக்கும், துன்பம், துயரம் விலகும்.
செவ்வாய்க்கிழமை: துணிவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
புதன்கிழமை : வஞ்சனை கொண்டவர்கள் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி ஏற்படும்.
வியாழக்கிழமை : நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
வெள்ளி & சனி : லட்சுமி கடாட்சம் உண்டாகும். 

கார்த்திகை விரதம் முறை

  
கார்த்திகை விரதம் முறை




இதனை
 `நட்சத்திர விரதம்'என்பர்.சரவணப்பொய்கையில்கார்த்திகைப்   பெண்கள்முருகனைச் சீரும்,சிறப்புடனும் பாலூட்டித்தாலாட்டி
 வளர்த்தனர்.அவர்களைப் போற்றும்வகையில் கார்த்திகை மாதம்,
கார்த்திகை நட்சத்திரநாளன்று விரதத்தைத்தொடங்க வேண்டும்.

தொடர்ந்து ஒவ்வொருமாதமும்கார்த்திகைநாளன்று விரதமிருத்தல்
வேண்டும்இவ்வாறுபன்னிரண்டு ஆண்டுகள் நிறைவேற்ற வேண்டிய விரதம் இதுகார்த்திகைமாதத்தில் வரும் பரணியன்று பகலில் உண்டு
இரவில் உண்ணாமல்,விரதத்தைத் தொடங்க வேண்டும்.

மறுநாள் கார்த்திகையன்று நீராடி முருகனை வழிபட்டுஅன்று முழுவதும்விரதமிருந்துதியானம்பாராயணம்கோவில் வழிபாடு என்ற
இவைகளைச் செய்ய வேண்டும்பகலிலும்இரவிலும் உறங்கக் கூடாது.
மறுநாள் ரோகிணியன்று காலையில் நீராடிமுருகனை வழிபட்டுச்
சிறிதளவு உண்ணலாம்விரதமும் நிறைவு பெறும்
.

சூரிய நமஸ்காரம் செய்யும் முறை

Font size: Decrease font Enlarge font
சூரிய நமஸ்காரம் செய்யும் முறை:












நிலை: 1
சூரியனைப் பார்தபடி,பாதங்களும் முழங்கால்களும்சேர்த்துப் படத்தில் உள்ளபடிநிமிர்ந்து மார்பை சற்றேமுன்னே தள்ளிவயிற்றைஉள்ளுக்குள் இழுத்துநிற்கவும்இப்பொழுது உடல்முழுவதும் குறிப்பாக இடுப்புப்பகுதியை விறைப்பாகவைத்து முன்னோக்கிப்பார்த்தபடி இறுத்தல்வேண்டும்.
சுவாச நிலைஆழ்ந்தஇயல்பான சுவாச நிலை.இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1. மார்பு நன்றாக விரிவடையும்.
2. கைகளை இறுக்கி அழுத்துவதால் கைகள் உருண்டு தரளுகிறது.
3.பின் முதுகு இறுக்கம் பெருகிறது.

நிலை: 2
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு இடுப்பை முடிந்த அளவு வளைத்து நிற்கவேண்டும்.
சுவாச நிலைகண்டிப்பாக மூச்சை நன்றாக இழுத்து நிறுத்திய பின் இந்தநிலைக்கு வரவேண்டும்.
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.தோள்பட்டை வலிமைபெருகிறது.
2.இடுப்பு பகுதி கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.
3.பின் முதுகு இறுக்கம் பெற்று வலிமைபெருகிறது.
4. வயிற்பகுதி நன்கு விரிவடைவதால் வயிறு தொங்குவதுதடுக்கபடுகிறது.

நிலை: 3
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு இடுப்பை முடிந்த அளவு வளைத்து தரையைதொட முயற்சிக்கவும்கையின் முழுபகுதி தரையில் தொட்டு மூக்குமெட்டியை தொடவேண்டும். (முடிந்த அளவு 1 அல்லது 2 முறைமுயற்சிக்கவும் நாளடைவில்எளிதாகி விடும்). இந்த நிலையில் கையைஎப்படி தரையை
தொட்டுளிர்களோ இதே நிலையில் கை கடைசி ( நிலை:10) வரை இறுக்கவேண்டும.
சுவாச நிலை:
கண்டிப்பாக மூச்சை முழுமையாக வெளியே விட்ட பின் இந்த நிலைக்குவரவேண்டும்.
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.உடலின் நரம்புகள் நன்றாக இழுக்கப்படுவதால் ரத்த ஓட்டம்அதிகரிக்கும்.
2.முன்கை (four arm) 3.பின்தொடை 4.முன்தொடை 5.ஆடுதசை (calf) 6.பின்முதுகு

நிலை: 4
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு நிலை: 3 ல் இருந்து கையை எடுக்காமல்ஒருகாலை மட்டும் முடிந்த அளவு பின்னோக்கி தள்ளவேண்டும்.தலையை நிமித்து வானத்தை பார்க்க வேண்டும்.
சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து கொண்டு இந்த நிலையை செய்யவேண்டும்(இந்த நிலையை எளிதாக செய்பவர்கள் சாதாரண மூச்சைவிட்டுக்கொள்ளலாம்).
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.வயிற்றிலிருந்து குதிக்கால் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளும்போக்கும்.
2.தோள்பட்டை வலிமைபெருகிறது.
3.பின்தொடை 4.முன்தொடை

நிலை: 5
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு நிலை: 4 ல் மடிக்கப்பட்டிருக்கும் காலை மட்டும்பின்னோக்கி தள்ளவேண்டும்அடுத்து தலையை நிமித்து வானத்தைபார்க்க வேண்டும்.
சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி கொள்ள வேண்டும்.
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.வயிற்றிலிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.
2. தொந்தி விழுவதை தடுக்கிறது.

நிலை: 6
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு மார்பின் மேல் முகவைக் கட்டை தொடும்படிஇருக்க வேண்டும்மார்பின் அடி பாகம் தரையை தொட்டிருக்க வேண்டும்.வயிறு தரையை தொடக் கூடாது.இதில் 1.கால் விரல்கள், 2.முழங்கால்முட்டிகள், 3.கைகள், 4.மார்பு, 5.மூக்குஇவை மட்டுமே தரையைதொட்டிருக்க வேண்டும்.
சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி கொள்ள வேண்டும்.

இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.மார்பு நன்றாக விரிவடைகிறது.
2.தோள்பட்டை வலிமைபெருகிறது.
3.கையின் பின்புற(arm triceps)தோற்றம் அழகு பெருகிறது
4.தொந்தி விழுவதை தடுக்கிறது

நிலை:7
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு கைகளை அழுத்தி இடுப்பின் மேல் உள்ள உடலைமுடிந்த அளவு பின்னோக்கி தள்ளவும்தலையை நிமித்து வானத்தைபார்க்க வேண்டும்.
சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி கொள்ள வேண்டும்.

இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.கையின் பின்புற(arm triceps)தோற்றம் அழகு பெருகிறது.
2.மார்பு நன்றாக விரிவடைகிறது.
3.வயிறு உள்ளவர்களுக்கு முக்கியப் பயிற்சி(தொந்தி விழுவதைதடுக்கிறது)
4.பின் முதுகு தோற்றம் அழகு பெருகிறது.

நிலை:8
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு கைகளை அழுத்தி இடுப்பின் மேல் உள்ள உடலைமுடிந்த அளவு மேல் நோக்கி இழுக்கவும்முழங்கால் முட்டி பார்க்கவேண்டும்.
சுவாச நிலை:
மூச்சை முழுமையாக வெளியே விட்ட பின் இந்த நிலைக்கு வரவேண்டும்.

இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.வயிற்றிலிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.
2.தோள்பட்டை வலிமைபெருகிறது. 3.பின்தொடை 4.முன்தொடை5.ஆடுதசை (calf) வலிமைபெருகிறது.

நிலை: 9
செய்யும் முறை:நிலை 4 ல் காட்டி உள்ள வாரே செய்தல் வேண்டும்ஆனால் (நிலை 4)அதில் எந்த காலை பின் இழுதிர்களோ அந்த காலை இந்தநிலையில் (நிலை 9)முன் இழுக்க வேண்டும்.
சுவாச நிலைமற்றும் இதனால் வலிமை பெரும் உறுப்புகள் நிலை 4 ல்காட்டி உள்ளவாரே.

நிலை: 10
செய்யும் முறைசுவாச நிலைமற்றும் இதனால் வலிமை பெரும்உறுப்புகள் நிலை 3 ல் காட்டி உள்ளவாரே.

நிலை: 11
செய்யும் முறைசுவாச நிலைமற்றும் இதனால் வலிமை பெரும்உறுப்புகள் நிலை 2 ல் காட்டி உள்ளவாரே.

நிலை: 12

சாதாரண நிலைக்கோ அல்லது நிலை 1 ல் காட்டி உள்ளவரோ முடிவுக்குவரலாம்
 
Blogger Templates