உம்பலப்பாடி
கிராம வளர்ச்சிக்குழு
அன்புடையீர்
உம்பளப்பாடி கிராம வளர்ச்சி
குழு நமது ஊரில் உள்ள சிவாலயத்திற்கு ஒருகால பூஜைக்காக கோவையை சேர்ந்த
அன்பர் வழங்கி வந்த உதவிகள் வழங்க இயலாத சூழ்நிலையால் அவற்றை தொடர்ந்து செயல்படுத்தவும்
இதே போல் நமது ஊரின் வளர்ச்சி என அனைத்தும் நமக்கு நாமே செய்துகொள்ள ஒரு குழுவாக செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்ற என்னத்துடன்
14.06.2020 அன்று உள்ளூர் இளைஞர்கள் ஒன்றுகூடி விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது.
அவற்றின் முடிவில் ஒத்த கருத்தும் சிந்தனையும் உள்ள நமது ஊரைச்சார்ந்த
வர்கள் பணிநிமிர்த்தமாக
வெளியூரில் உள்ளவர்கள் என அனைவரையும் தொடர்புகொண்டு உதவிகளை நாடி ஒரு குழுவாக அமைக்க
வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
21.06.2020 அன்று மாலை சிவன்கோவிலில்
மீண்டும் 2 வது கூட்டம் தொடங்கியது, இக்கூட்டத்தில் நமது கிராமத்தை சார்ந்தவர்களிடம்
தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளுடன் சுமார் 15 உறுப்பினர்களின்
ஆதரவுடன் ஒரு அமைப்பை நிருவவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இக்கூட்டத்தில்
விவாதித்து அதன்படி அமைப்பிற்கான பெயர் தெரிவு செய்யப்பட்டது.
உம்பலப்பாடி
கிராம வளர்ச்சிக்குழு
UMBALAPADI
VILLAGE WELFARE GROUP (UVWG)
இக்குழுவிற்கான விதிகள்
1) நமது ஊரை பூர்விகமாக கொண்ட எவரும் இக்குழுவின்
உறுப்பினராகலாம்
இக்குழுவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முழுமனதுடன் இணைந்து
செயல்படவேண்டும்
2) இக்குழுவின் முழு
நோக்கம் கிராம வளர்ச்சி சார்ந்த்து எந்த ஒரு திட்டமும்
உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு பெரும்பான்மை
உறுப்பினர்களின்
ஆதரவுடன் மட்டுமே செயல்படுத்தவேண்டும்.
3)கிராமத்தின் தேவைகளை
கண்டறிந்து அவற்றை செயல்படுத்த அவசிய
தேவைக்கு முன்னுரிமை அளித்தல்
4)இக்குழு செயல்பட தேவையான
நிதி ஆதாரங்கள் உறுப்பினர்களின் பங்குத்தொகை கிராமத்தில் உள்ள தன்னார்வலர்கள் நன்கொடையாளர்கள் மூலம் பெற இக்குழு
உறுப்பினர்கள் இணைந்து செயல்பட வேண்டும்
5) நிதி ஆதாரங்களை பெற
வங்கி கணக்கு தொடங்கி அவற்றின் மூலமே பெறவேண்டும் அனைத்து வரவு செலவுகளுக்கும் முறையான
பதிவேடுகள் பராமரிக்க வேண்டும், குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரண்டுமுறை உறுப்பினர்களின் (செயற்குழு)பார்வைக்கு உட்படுத்தி ஆய்வுகள் செய்தல் வேண்டும்.
6) வங்கி கணக்கு தலைவர் மற்றும் பொருளாலர் இணைந்து
செயல்படுத்தும் விதம் தொடங்க வேண்டும்( INDIVIDUAL JOINT ACCOUNT)
7) குழுவின் பொறுப்பாளர்கள்
தலைவர்
பொருளாலர்
ஒருங்கிணைப்பளர்
செயற்குழு உறுப்பினர்கள்
விழா குழு
தலைவரின்
பொறுப்பும் பணிகளும்
1)
ஆண்டுக்கு 4 கூட்டங்கள் நடத்தவேண்டும்
2)
குழுவின் திட்டங்களை முன்வைத்து விவாத்த்தை தொடங்கி வைக்க
வேண்டும்.
3)
நிதி ஆதாரங்களை திரட்டுதல் முறையான வகையில் செலவினத்திற்கு
ஒப்புதல் அளித்தல்
4) ஒவ்வொரு விழாவிற்கும் விழா குழுஅமைத்தல் தேர்தல் குழு அமைத்தல்
5)
ஆண்டறிக்கை வெளியிடுதல்
பொருளாலரின் பொறுப்பும் பணிகளும்
1) செயற்குழு எடுக்கும் முடிவிற்கேற்ப நிதி பயன்படுத்துதல்
2) வங்கி கணக்குகளை பராமரித்தல்
ஆய்வுக்கு முன்னிலைப்படுத்துதல்
3) விழா குழுவுடன் இணைந்து
திட்டமிடுதல் நிதி ஆதாரங்களை
மேம்படுத்துதல் செலவுசெய்தல்
ஓருங்கிணைப்பாளர் பொறுப்பும்
பணிகளும்
1) தலைவருடன் சேர்ந்து
திட்டங்கள் தயாரித்தல்
2)
உறுப்பினர் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பு பணியின்
மேற்கொள்ளுதல்
3)
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூட்டுதல்
4)
விழா குழு நியமனத்தில் தலைவருடன் இணைந்து செயல்படுதல்
5)
திட்டக்குழுவின் பொறுப்பேற்று நடத்துதல்
செயற்குழு உறுப்பினர்களின்
பணிகளும் பொறுப்புகளும்
1) செயற்குழு உறுப்பினர்கள் நமது அமைப்பை வழுப்படுத்துதல்
2) திட்டக்குழு உறுப்பினர்களாகவும்
செயல்படுவார்கள்
3) தேவைக்கு ஏற்ப திட்டங்களை
தயாரித்தல்
4) அமைப்பு தேர்தல் நடத்துதல்
5) பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்தல் பணிகாலத்தை
நிர்ணயித்தல்
6) அமைப்பு விதிகளை திருத்தம்
செய்தல் சேர்த்தல் நீக்கம் ஆகியவற்றை மேற்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்
7) புதிய பொறுப்பளர்களுக்கு உரிமைகளை வழங்குதல்
பொதுக்குழு உறுப்பினர்களின்
பணிகளும் பொறுப்புகளும்
1) அமைப்பின் அடிப்படை உறுப்பினர்கள்
2) விருப்பத்தின் பேரில்
அனைத்து பதவிகளுக்கும் போட்டியிடலாம்
3) செயற்குழு அறிவிப்பின்
படி பொறுப்புகள் வழங்கப்படும்
4) குழுவின் அனைத்து
செயல்பாட்டில் தங்களின் பங்களிப்பு மிக முக்கியமாகும்
5) அனைவரும் விழாகுழுவின்
அங்கத்தினர் ஆவார்கள்
குழுவிற்கான முதல் தேர்தல்
தலைவராக
திரு கோ.இராஜா அவர்கள்
பொருளர் திரு மு.சச்சிதானந்தம் அவர்கள்
ஒருக்கிணைப்பாளர் திரு
பால. சிவகோவிந்தன் அவர்கள்
என அனைவரும்
ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்
வங்கி கணக்கு
பாபநாசம் இந்தியன் வங்கியில் 27.,7.2020 அன்று வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வரவு செலவுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
முதல் திட்டம்
சிவன் கோவில் ஒருகால பூஜை செய்ய அர்ச்சகர்கள் நியமனம்
செய்து அவர்களுக்கான ஊதியம் வழங்குதல்
செயற்குழுவின் முடிவின் படி அர்சகர்கள் நியமனம் ஏற்கனவே நியமிக்கப்பட்டு பணியாற்றிவரும் திரு பாபு மற்றும் திரு சுரேஷ் ஆகியோரை
தொடர்ந்து பணியாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது . அவர்களுக்கான ஊதியம்
திரு சுரேஷ் அவர்களுக்கு ரூபாய் 6000 ( ஆறாயிரம் மட்டும்)
திரு பாபு
அவர்களுக்கு ரூபாய் 2000 (இரண்டாயிரம் மட்டும்) மொத்தம் மாதம் ஒன்றிக்கு ரூபாய் எட்டு ஆயிரம் செலவினம் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது ஊதியமானது வங்கி பரிமாற்றம் மட்டுமே மேற்கொள்ள
வேண்டும் எனவழிகாட்டப்பட்டது. ஊதியமானது 2020 ஜுலை முதல்
வழங்கப்பட்டு வருகிறது.
திட்டம் 2
சிறப்பு பூஜை ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று
உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு ஏற்ப
அந்த கோவிலில் சிறப்பு பூஜை நடத்த திட்டமிடப்பட்டது இதன் அடிப்படையில் சுழற்சி முறையில் 2021 ஆம் ஆண்டு முதல் பூஜைகள் நடைபெறுகிறது.
திட்டம் 3
அர்ச்சகர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குதல் அரை மாத ஊதியம்
திட்டம் 4
கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று இரவு சிறப்பு பூஜை நடத்துதல் ஒவ்வொரு மாதமும் முதல் நடைபெற்று வருகிறது
திட்டம் 5
மகா சிவராத்திரி தினத்தன்று
நாட்டியாஞ்சலி விழா 2023 ஆண்டுமுதல் தொடங்கி
தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
அனைவரின் ஒத்துழைப்போடும் மிக சிறப்பான
முறையில் பணியாற்றிவரும் இக்குழுவிற்கு தங்களின் ஒத்துழைப்பும் ஆதரவு ம் தொடர்ந்து வழங்கிட அன்புடன் வேண்டுகிறோம்.
இப்படிக்கு
உம்பலப்பாடி கிராம வளர்ச்சிக்குழு
உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் ,மற்றும் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கி வரும் அனைவருக்கும் நன்றிகளை
தெரிவித்துக்கொள்கிறோம்
தங்களின் தொடர் ஆதரவிற்கு
SB
AC / NO :
690 360 3251
INDIAN BANK : PAPANASAM BRANCH
IFSC CODE : IDIB000P128
MICR CODE : 614019008
01.01.2024
அன்றய நிலவரப்படியான உறுப்பினர்கள் விவரம்
வ எண் |
பெயர் |
பதவி |
தொழில் |
1 |
திரு. கோ. இராஜா |
தலைவர் |
விவசாயம் |
2 |
திரு. மு. சச்சிதானந்தம் |
பொருளாலர் |
ஆசிரியர் |
3 |
திரு. பால.சிவகோவிந்தன் |
ஒருங்கிணைப்பாளர் |
பல் மருத்துவர் |
4 |
திரு. ஆணை குருபரன் |
செயற்குழு உறுப்பினர் |
பொது மேளாலர் TAFFE |
5 |
திரு.இராஜராஜன் |
செயற்குழு உறுப்பினர் |
பட்டய கணக்கர் |
6 |
திரு ரெ இளையராஜா |
செயற்குழு உறுப்பினர் |
வழக்கரிஞர் |
7 |
திரு. ரெ. சுதாகர் |
செயற்குழு உறுப்பினர் |
தனியார் நிறுவனம் |
8 |
திரு கி. கண்ணன் |
செயற்குழு உறுப்பினர் |
தனியார் நிறுவனம் |
9 |
திரு இரா இராம்பிரசாத் |
செயற்குழு உறுப்பினர் |
தனியார் நிறுவனம் |
10 |
திரு சிவ ஸ்ரீபால் |
செயற்குழு உறுப்பினர் |
தனியார் நிறுவனம் |
11 |
திரு ந மணிமாறன் |
செயற்குழு உறுப்பினர் |
தனியார் நிறுவனம் |
12 |
திரு சு கனகராஜ் |
செயற்குழு உறுப்பினர் |
உதவி ஆய்வாளர் காவல்(BHEL) |
13 |
திரு. பா வினோத்குமார் |
செயற்குழு உறுப்பினர் |
TNSTC |
14 |
திரு கி சுரேஷ்பாபு |
செயற்குழு உறுப்பினர் |
தனியார் நிறுவனம் |
15 |
திரு க சத்திய மூர்த்தி |
செயற்குழு உறுப்பினர் |
தனியார் நிறுவனம் |
16 |
திரு
கோகில வசன் |
செயற்குழு உறுப்பினர் |
தனியார் நிறுவனம் |
17 |
திரு நா கார்த்திகேயன் |
செயற்குழு உறுப்பினர் |
தனியார் நிறுவனம் |
18 |
திரு ரெ சதீஸ்குமார் |
செயற்குழு உறுப்பினர் |
தனியார் நிறுவனம் |
19 |
திரு ப துரைமாணிக்கம் |
செயற்குழு உறுப்பினர் |
விவசாயம் |
20 |
திரு க சுப்ரமணியசிவா |
செயற்குழு உறுப்பினர் |
TNCSC |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக