அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம்
1,1,1 முதல் 1,6,6 வரையிலான பலன்கள்..
பாய்ச்சிகை எனப்படும் நான்கு முக மரக் கட்டையினை மூன்று தடவைகள் உருட்டுவதன் மூலம் கிடைக்கும் எண்களைக் கொண்டு அதற்கான பலன்களை அகத்தியர் அருளியிருக்கிறார் அந்த வகையில் இன்றும் 1,1,1 முதல் 1,6,6 வரையிலான எண்களுக்கான பலனைக் காண்போம்.
1,1,1.
மும்முறையொன்றேவந்தால் முடிந்திடும் நினைத்த எண்ணம்
அயபுவி
மீது நீயும் அரசனைப் போல வாழ்வாய்
பம்பு
சூனியமும் நீங்கும் பலவித லாப
முண்டாம்
தம்பிரான்
சாக்ஷியாக தாக்ஷிதானிலைபாரே.
மூன்று முறையும் ஒன்று விழுந்தால் எண்ணிய எண்ணம் நிறைவேறும். மன்னன் போல் வாழ்வாய். பம்பு, சூனியம் நீங்கும் பலவிதத்தில் லாபமுண்டாகும். ஒருவித கவலையும் ஏற்படாது.
1,1, 2.
பாரப்பா ஒன்று மொன்றும் பதறியே இரண்டும் வீழ்ந்தால்
சீரது
வழிந்து போகும் சிக்குகள் பலவுண்டாகும்
பேரது
கெடுக்கவுந்தன் பெண்டீரும்
துணையே யாவாள்
கூறவே
நினைத்த யெண்ணம் கூடாது
நாள் தானாகவே.
ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுமானால் உன் குடும்பத்தில் சீரழிவும்,சிக்கல்களும் உண்டாகும். உனது புகழைக் கெடுக்க உன் மனைவியே துணையாயிருப்பாள். நீ நினைத்த எண்ணமும் முடிவதற்கு வெகுநாள் ஆகும் என்கிறார்.
1,1,3.
தானாகும் ஒன்றும் வீழ்ந்து தனித்தொன்றும் மூன்றும்
வீழ்ந்தால்
ஆணாக
பிறக்கும் பிள்ளை அதனாலேயே யோமுண்டாம்
வீணான
கவலையெல்லாம் விலகிடும்
கொண்டமும் நோயம்
தோணாது
கஷ்டம் நீங்கும் துணையது
முருகனுண்டாம்.
முதலில் ஒன்று விழுந்து, மறுபடியம் ஒன்றும் மூன்றும் விழுமானால் மனையில் ஆண் குழந்தை பிறக்கும். ஆதனால் அதிர்ஷ்டம் பெருகும். ஆபத்துக்கள் விலகும். கெண்டமும், நோயும் நீங்கும், முருகனின் கருணையால் கஷ்டம் நீங்கும் என்கிறார்.
1,1,6.
உண்டப்பா கெடுதியுண்டு ஒன்றுடனொன்று மாறும்
நின்றிட
விழுமானால் நிலைக்காது நினைத்த எண்ணம்
அன்றியும்
அரசராலே அவகேடு வந்து
நேரும்
சென்றிடும்
செல்வமுற்றும் சொல்வது
விஷம்போலவே.
ஒன்றின் பின் ஒன்றும், ஆறும் விழுமானால் உனது எண்ணம் பலிதமாகாது. அரசாங்க விரோதமும் அதனால் பலவிதத்தில் பொன் பொருள் விரையமாகும். உன் வாக்கு விஷம் போலிருக்கும் என்கிறார்.
1,2 ,1.
விஷபாம்பை
போலே பார்ப்பார் ஒன்றுரெண்டொன்று வீழ்ந்தால்
பசப்பு
வார்த்தைகள் பேசிபறிப்பாருள்
பொருளை எல்லாம்
நிஜமாக
உரைத்திட்டாலும் நியாயமுணக்கிராது
கசங்கிட
கடனில் தொல்லை காட்டிடும்
கவலையாமே.
ஒன்று இரண்டு ஒன்று என விழுமானால் உன் சொந்தங்களும், நட்பும் உன்னை விஷப் பாம்பினை பார்ப்பது போல பார்ப்பார்கள்.நீ உண்மையை உரைத்தால் அது உறுதியாக இருக்காது. கடன்காரர்களின் தொல்லையும் காட்டும். கவலையும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
1,2,2.
கவலையேன் ஒன்றும் ரெண்டும் இரண்டுமே விழுகுமானால்
ஷதவணையில்லாமல்
சேரும் நாள் பொருளும் ஜீவன்
குவலயத்
தன்னிலுந்தன் குணத்தை
பாராட்டுவார்கள்
துவக்கிடும்
நோயும் நீங்கும் துணைவராலே சகாயம்.
ஒன்றும், இரண்டும், இரண்டும் விழந்தால் பலவிதமான லாபமுண்டாகும். கைவிட்டுப்போன பொருளாயினும், ஜீவனாயினும் தவணையில்லாமல் எட்டு நாளைக்குள் வந்து சேரும். உன்னை மிகவும் நல்லவனென்று புகழ்வார்கள். ஆரம்பமாகும் நோயும் நீங்கும். சினேகிதர்களால் உதவியுண்டாகும். என்கிறார்.
1 ,2,3.
சகாயத்தால் அபாயம் நேரும் சரியொன்றுமிரண்டும் மூன்றும்
விகாரமாய்
தோன்றுவாய் நீ விண்பெய ரெடுக்கலாகும்
அகாலமாய் மரணசேதி
அப்பனே கேட்பாய் நீயும்
சுகரசுக
மிழந்தபோதும் தைரியந்தனை
விடாதே.
ஒன்றும், இரண்டும், மூன்றும் விழுந்தால் உன் கிரகக் கோளாறினால் உன் முகமே விகாரமாகத் தோன்றும். பெயரும் புகழும் கெடும். பிறறுக்கு உதவினாலும் அதனால் அபாயமுண்டாகும். உறவினர்களுக்குள் திடீரென மரணச்சேதியும் கேட்பாய். மேலும் உனது சுகம் முற்றும் இழந்தாலும் உனது தைரியத்தை மட்டும் விடாதே என்கிறார்.
1,2,6.
தைரியத்தை
விடாதே தனியொன்றும் மிரண்டுமாறும்
வைரயா
யிருந்தபேரும் வணங்குவாருன்னைக்
கண்டால்
சௌரியத்
தொழிலில் பாபம் சஞ்சலம்
பிணியும் நீங்கும்
பரிவுடன்
பிறக்கும் பிள்ளை பலித்திடும்
அதனால்யோகம்.
ஒன்றும், இரண்டும், ஆறும் விழுந்தால் பகையாயிருப்பவர்களும் உறவாக வந்து சேருவார்கள். தொழிலில் மேன்மையான லாபமும், பிணியும் ,கெண்டமும், பலவித கவலைகளும் நீங்கும்.ஆண்குழந்தை பிறக்கும். ஆதனால் லாபமுண்டாகும் என்கிறார்.
1,3,1.
யோகமுண்டு ஒன்றும் மூன்றும் உடனொன்றும் விழுகுமானால்
ஏகமாய்ப்
பொருள் சேரும் இடரின்றியெண்ணங்கூடும்
சாகவே
வாய்ந்த நோயும் சுகமாகும்
மருந்தினாலே
வேகமாய்
செய்திதோன்றும் வியாபாரம்
விர்த்தியாமே.
ஒன்றும், மூன்றும், ஒன்றும் விழுந்தால் நல்ல யோக பலாபலன்களைத் தரும். வேண்டிய பொருள் வீடுவந்து சேரும். எண்ணம் பலிக்கும். மரணமாக்க வந்த நோய் மருந்தினால் நீங்கும். நன்மையான செய்தியும் விர்த்திகரமான வியாபாரமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
1,3,2.
ஆமப்பா விழுந்த எண்தான் ஒன்று மூன்றிரண்டேயாகும்
காமத்தையளித்த
மங்கை கைவிடுவாளேயுன்னை
ஷேமத்தை
கெடுக்கவுந்தன் சொத்துக்களொழிந்து
போகும்
போமப்பா
உந்தன் கீர்த்தி பூஜிப்பாய்
நவக்கிரகத்தை.
ஒன்றும்,மூன்றும்,இரண்டு விழுமானால் உனக்கு அபிமான தாரமாகிய ஓர் மங்கை உன் பொருள்கள் அனைத்தையும் அபகரித்து உன்னை கைவிடுவாள். அதனால் உன் நலம் கெடும். உனக்கு அபகீர்த்தி உண்டாகும். பலவிதமான கவலைகளும் உண்டாகும். ஆனால் இன்று முதல் ஒன்பது நாள் நவக்கிரக பூஜை செய் என்கிறார்.
1,3,3.
கிரகங்கள்
நல்லதாச்சு காணுமொன் றிருமூன்றாச்சு
மறைந்ததோர்
பொருளுஞ்சேரும் மருந்தினால்
நோயும் நீங்கும்
சிறப்புற மணமேகூடும் செய்தொழில் லாபங்காணும்
அறமது
புரிந்துவாழ்வாய் அகஸ்தியர்
மொழிமீறாதே.
ஒன்றும், மூன்றும்,மூன்றும் உதயமானால் காணமாற் போன பொருள் யாவும் கிடைக்கும். கனத்த நோயும் நீங்கும். கலியாணம் கூடும். தொழிலில் லாபமுண்டாகும். அகஸ்தியம் வாக்கை மீறாமல் தருமம் செய்து வாழ்வாய் என்கிறார்.
1,3,6.
மீறியேவுந்தனை வாக்கை மனைவி மக்களும் நடப்பார்
தூறியே
மிகுபேர் நஷ்டம் துணைவரால் வந்துநேரும்
ககரியம்
கைகூடாது கவலையே அதிகரிக்கும்
தூரியே
நோய்கள் காட்டும் துலைதூரம்
செய்திதோன்றும்.
உனக்கு ஒன்றும், மூன்றும், ஆறும் விழுமானால் மனைவியும், மக்களும் உனது வாக்கை மீறி நடப்பார்கள். நண்பர்களினால் சண்டை பொருள் நஷ்டம் ஏற்படும். கவலைகள் அதிகரிக்கும். கொடுமையான நோயும், கெட்ட செய்திகளும் வரும்.காரியம் கைகூடாது போகும் என்கிறார் அகத்தியர்.
1,6,1.
தோன்றிடும் பகைதான் மெத்தடுர்ந்தொன்று மாரொன்றாகில்
ஆன்றோர்கள்
தேடிவைத்த ஆஸ்தியுமழிந்து போகும்
கானபடும்
கண்ணிதன்னில் மான்படும்
கவலைபோலே
வான்பதிக்குள்ளே
நீயும் வருந்தவே நேருமப்பா.
உனக்கு ஒன்றும், ஆறும், ஒன்றும் விழுந்தால் மிகவும் பகையுண்டாகும். பெரியோர்களின் பொருள் அழியும். வேடன் வைத்த கண்ணில் சிக்கிய மான் போல் கலங்கி நிற்கவும் நேரிடும். கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.தைரியத்தை விடாதே! சீக்கிரத்தில் நன்மையடைவாய் என்கிறார்.
1,6,2.
அப்பனே ஒன்றும் ஆறும் உறுதியாய் இரண்டு வீழ்ந்தால்
தப்பாது
முடியுமப்பா தானெதை நினைத்தபோதும்
ஒப்பிலா
வாழ்வுண்டாக்கும் உள்ளுரிலடைவாய்லாபம்
கப்பியபகை
நோய் நீங்கும் கங்கணப்ராப்தமாமே.
ஒன்றும், ஆறும், இரண்டும்
விழந்தால் நீ நினைத்த
எண்ணமெல்லாம் தடங்கலில்லாமல் முடியும். செல்வாக்கான வாழ்க்கையுண்டாகும் உள்ளுரிலேயே நல்ல
லாபங்களெல்லாம் கிடைக்கும். பகையும் நோயும் நீங்கும், மனையில் சுப காரியம் நடக்கும் என்கிறார்.
1,6,3.
1,6,3.
ஆகுமே கவசம்பாரு அப்பனே ஒன்றார் மூன்றும்
சோகமே
பெரிதாய் நிற்கும் சலிப்பினால் இடத்தை மாற்றும்
ஏகமாய்
பொருளும் போகும் இடறான
நோயுண்டாகும்
போகுமே
தொழிலும் நஷ்டம் பொல்லாப்பு
மடைகுவாய்.
உனக்கு ஒன்றும், ஆறும் ,மூன்றும் வந்ததால் குடும்பத்தில் கலகம் நேரும்.எதிலும் துயரமே மேலிடும். சலிப்பின் காரணமாய் இடமாறுதலும் பெரும் பொருள் சேதமும், கடுமையான நோயும் உண்டாகும். தொழில் முடக்கமாகும்,சினேகித பொல்லாப்பு மடைவாய் என்கிறார்.
1,6,6.
அடைகுவாய் லாபமப்பா ஆக ஒன்றாது மாறும்
தடையின்றி
விழுந்தாலே தழைத்திட மகப்பேறாகும்
புடைசூழ
குடம்பந்தன்னில் புகழான
வாழ்வுண்டாகும்
இடையிலே
துயர் வந்தாலும் ஏதொன்றுமுனை
செய்யாதே.
இப்பொழுது ஒன்றும், ஆறும், ஆறும் வந்தால் குடும்பத்தில் புத்திர பாக்கியமுண்டாகும். பந்துக்களுடனே சுகஷேமத்துடன் வாழ்வாய். இதன் நடுவிலே கொஞ்சம் கஷ்டத்தையடைந்த போதும் அக்கஷ்டம் உன்னை பாதிக்காது. உன் ஆயுள்காலம் வரையில் ஷேமமாக வாழ்வாய் என்கிறார்.
இதன் தொடர்ச்சியினை நாளைய பதிவில் காண்போம்.
2,1,1.
செய்யவேயிரண்டு மொன்றும் சேர்ந்ததொன்று விழுமானால்
பையவே பொருளும்போகும் பயணமே போகொணாது
மெய்யதாய் கலகமாகும் மனைவி மக்களும் பகைப்பார்
ஐயமில்லாம லெண்ணம் அபலமாய் போகக்கூடும்.
உனக்கு இரண்டும், ஒன்றும், ஒன்றும் உதயமானதால் அடிக்கடி பொருள் நஷ்டம் உண்டாகும். வெளியூர் பயணத்தை
தவிர்க்க வேண்டும். மனைவி மக்களுடன் பிணக்கு உண்டாகும். எண்ணம் நிறைவேறாது எண்கிறார்.
2,1,2.
கூடுமேயெண்ணமெல்லாம் கூறும் ரெண்டொன்றும் ரெண்டும்
ஓடுமே வினையெல்லாம் உடன்பிறந்தோரால் நன்மை
தேடுமுன் கிடைக்குமப்பா தொழிலது நீடித்தோங்கும்
கோடுசொல் தவறிடாத கோமான் போல் வாழ்குவாயே.
தற்போது இரண்டும், ஒன்றும், இரண்டும் விழுந்தால் பொல்லாத நோயும், தீவினைகளும் நீங்கும். உன்னுடன் பிறந்தவர்களால் வேண்டிய லாபமுண்டாகும். நாடிய
பொருள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். தொழில் தழைத்து ஓங்கும், தனவந்தனாக வாழ்வாய் என்கிறார்.
2,1,3.
வாழநீ எத்தளித்தாய் வக்கரித்தானே கேது
தாழரெண்டொன்றும் மூன்றும் தடைப்பட வழுந்தபோது
சூழுமுன் குடும்பமின்று சுகங்கெட்டு சிதறிப்போகும்
கோழையாம் சில பேரால் குலக்கேடு வினையலாகுமே.
இரண்டும், ஒன்றும், மூன்றும் விழுந்தால் உனக்கு கேது வக்கரித்திருக்கிறான் என்று பொருளாகிறது. அதனால்
சுகமான வாழ்க்கை இருக்காது. குடும்பம் சிதறி ஆளுக்கொரு இடமாக மாற்றி இருக்க
வைக்கும். சில பேர்களால் உனது வம்சத்திற்கு அவமதிப்பைத் வந்து சேரும் என்கிறார்.
2,1,6.
விளையாது வெகுவாய் துன்பமிரண்டு ஒன்றாறுமானால்
பழைய நாள் வழக்கும் வெல்லும் பாவையும் கெர்பமாவாள்
தழைத்துமே குடும்பமோங்கும் தட்டாது உந்தன் வாக்கு
துலைந்திடும் கெண்டம் நோயும் துணையது உண்டு தெய்வம்.
இரண்டும், ஒன்றும், ஆறும் அடுத்தடுத்து விழுமானால் அதிர்ஷ்டவசமான லாபமெல்லாம் கிடைக்கும்.
முன்னோர்களின் குடும்ப வழக்குகளின் சிக்கலொழியும். மனையாளுக்கு கெர்ப்பம்
தரிக்கும். தழைத்த குடும்பம் செழித்து ஓங்கும் உன் வார்த்தைக்கெதிர் வார்த்தையிராது,
கெண்டமும் நோயும் நீங்கும், தெய்வம் துணையுண்டு என்கிறார் அகத்தியர்.
2,2,1.
தெய்வத்தின் சகாயமுண்டு தென்புவி விருரெண்டான்றால்
வையகமீது துன்பம் வருந்திடா தனக்குயேதும்
செய்யவே தொலிலுமோங்கும் சந்தோச செய்தி தோன்றும்
பொய் சொல்லா புனிதனாக புவிதனில் வாழ்வாயன்றோ
உனக்கு இரண்டுமுறை இரண்டும் இறுதியில் ஒன்றும் விழுந்தால் எத்தகைய
துன்பமாயினும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். தொழிலில் அளவற்ற லாபங்களையளிக்கும். பல
ஊர்களிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். தவிர நீ பொய்யுரையாத புனிதனாகவும் வாழ்வாய் என்கிறார்.
2,2,2.
அன்று நீ பாவம் அலைச்சலும் திரிச்சலாகும்
நன்றில்லை மூரெண்டானால் நயம் பேசி மோசம் செய்வார்
வென்றிடும் வழக்கானாலும் வகையற்று தோற்றுபோகும்
ஒன்றுமே பயன்படாது உருபடா முறையிதமே
அன்று நீ பாவம் அலைச்சலும் திரிச்சலாகும்
நன்றில்லை மூரெண்டானால் நயம் பேசி மோசம் செய்வார்
வென்றிடும் வழக்கானாலும் வகையற்று தோற்றுபோகும்
ஒன்றுமே பயன்படாது உருபடா முறையிதமே
மூன்று முறையம் இரண்டு விழுமானால் முன்
காலத்தில் நீ
செய்த வினையினால் இப்பிறவியில் வெகு கவலைகள் உண்டு என்கிறார். மேலும் எக்காரியத்திலும் நன்மை
ஏற்படாது. வெல்லக் கூடிய வழக்குகள் கூட கலகத்தால் தோல்வியாகும். நீ செய்யும் காரியம் எதுவும்
உருப்படாது. சில நாள் போக வேண்டும் என்கிறார்.
2,2,3.
ஆமென விரண்டும் ரெண்டும் அடுத்தது மூன்றும் வீழ்ந்தால்
தாமதமாகா தெண்ணம் தழைத்திட செல்வமோங்கும்
போமென வெளியூர் போக பல தொழில் விர்த்தியாகும்
காமனை யெரித்தோன் மைந்தன் கந்தனும் துணையிருப்பான்
இருமுறை இரண்டும் இறுதியில் மூன்றும்
விழுந்தால் ஆகாத
காரியமாயினும் தாமதமின்றி முடியும். செல்வமோங்கும், தொழிலில், வெளியூர் பயணத்தில் லாபமுண்டாகும். கந்தநாதனின் கருணையால் கவலைகளெல்லாம் நீங்குமாம்.
2,2,6.
துணையென நம்பிடாதே தொல்லையாம் பலபேர் நேசம்
இணைபுடனிருரெண்டாறும் இடரப்பா விழுந்ததாலே
வினையமாய் தொழிலும் நஷ்டம்வந்திடும் வழக்கரும்வம்பும்
மனையிலே களவு போகும் மனைவிக்கும் தோஷமாமே
உனக்கு இரண்டு முறை இரண்டும் கடைசியில் ஆறும் விழுந்தால், நீ ஒருவரையும் நம்பாதே!,சிலபேர்களால் உனக்கு இடர்விளையக்கூடும். தொழிலில் நஷ்டம் வம்பு
வழக்குகளேற்படும். மனையில் களவு போகும். மனைவிக்கு பலவித நோய்களை காட்டும் என்கிறார்.
2,3,1.
தோஷமே நேருமப்பா இரண்டுடன் மூன்றொன்றொனால்
மோசமேயுன்னை செய்ய முழுதுமே யோசிப்பார்கள்
காசுடன் தொழிலும் போகும் கவலைகள் மிகவே தோணும்
பாசமா யுள்ளபேரும் பிரிந்திடுவாரே யுன்னை.
தோஷமே நேருமப்பா இரண்டுடன் மூன்றொன்றொனால்
மோசமேயுன்னை செய்ய முழுதுமே யோசிப்பார்கள்
காசுடன் தொழிலும் போகும் கவலைகள் மிகவே தோணும்
பாசமா யுள்ளபேரும் பிரிந்திடுவாரே யுன்னை.
உனக்கு இரண்டும் மூன்றும் ஒன்றும் விழுந்ததால் சொந்தங்களும், நட்புகளும் உனக்கு மோசமே செய்ய துணிவார்கள்.
கைப்பொருள் விரையமும், தொழில்
நஷ்டமும் அதனால் கவலைகளும் உண்டாகும். உன்னிடம் அன்புள்ளவர்கள் கூட உன்னை விட்டு பிரிவார்கள்
என்கிறார்.
2,3,2.
உன்மனம் போலேயாகும் மிரண்டு மூன்றிரண்டே வீழ்ந்தால்
பண்டைய பொருளும் சேரும் பகைவர்கள் குலமே நாசம்
பெண்டுடன் புத்திரபேரும் பெருகுவாய் வேணலாபம்
கொண்டாடும் உனது தெய்வம் கூடவே துணையிருக்கு.
உன்மனம் போலேயாகும் மிரண்டு மூன்றிரண்டே வீழ்ந்தால்
பண்டைய பொருளும் சேரும் பகைவர்கள் குலமே நாசம்
பெண்டுடன் புத்திரபேரும் பெருகுவாய் வேணலாபம்
கொண்டாடும் உனது தெய்வம் கூடவே துணையிருக்கு.
இரண்டுடன் மூன்றும் இரண்டும் விழுமானால்
எதிரிகள் இல்லாத
வாழ்க்கையும், பூர்வீக
பொருளனைத்தும் வந்து சேரும். இரண்டு தாரங்களுண்டாகும், புத்ர லாபம் பெருகும், பகைவர்களின் குலமே நாசமாகும். உன்
வீட்டில் மடிந்த குலதெய்வங்கள்
உனக்குப் பக்கத்துணையாக இருக்கும் என்கிறார்.
2,3,3.
இருக்குமே கஷ்டமாக இரண்டுடன் யிருமூன்றானால்
உருக்குமே உள்ளந்தன்னை உலகிலே கெடுபேராகும்
பெருக்கமாய் இருந்தசெல்வம் பலவிதவிறையமாகும்
நொறுக்குமே நோய்தானுன்னை நிலையது நீங்கிப்போகும்
இரண்டுடன் இரு மூன்று விழுந்தால் அதிக கஷ்டங்களும் அதனால் மனதை
வருத்தக் கூடிய கவலைகள் உண்டாகும். கெட்ட பெயரை ஏற்படுத்தும். நிறைந்திருந்த செல்வம் பல
வகையில் விரயமாகும். இதனால் நோயும், கவலையும் சூழ்ந்து சுயபுத்தி மாற்றும் என்கிறார் அகத்தியர்.
2,3,6.
நீங்கும் கவலையெல்லாம் இரண்டு மூன்றாறுமானால்
ஓங்கிடும் உனதுசெல்வம் உயருமே தொழில்தானப்பா
சோங்கிடும் தோஷம்நோயும் தொலைத்திடும் அஞ்சிடாதே
வாங்கிய கடன்தான் நீங்கி வறுமையுமகன்றுபோமே.
இரண்டும், மூன்றும், ஆறும் விழுந்ததால் கவலைகள் எல்லாம் நிலவைக் கண்ட இருள்போல் விலகும். செல்வம்
ஓங்கும், மேலான தொழிலுண்டாகும்,
சகல தோஷங்களும், நோயும் நீங்கும், கடன்தீரும், குடும்பத்தின் வறுமையகலும் என்கிறார்.
2,6,1.
போமெனதுயரம் போகும் பக்ஷமாய் ரெண்டாறொன்றில்
கோமான்போல் வாழ்வுண்டாகும் குடும்பத்தில் மணமே
தாமதமின்றி நோயும்தணிந்திடும் வெளியூர் போகக்கூடும்
ஷேமமேத மிதவுமுண்டாகும் ஜெகம் புகழடைகுவாயே.
இரண்டும், ஆறும், ஒன்றும்
விழுந்தால் இல்லறத்தின் துன்பங்களெல்லாம் விலகும், தனவந்தனாக வாழ்வு ஏற்படும். மனையில் மணங்கூடும்,நோய்கள் நீங்கும், வெளியூர் போகவே ஷேமத்தைத் தரும், பிரக்யாதியளிக்கும் என்கிறார்.
2,6,2.
வாயவே யிரண்டுமாறும் வருத்தமே இரண்டும் வீழந்;தால்
தோயவே பொருளும் நஷ்டம் தொழில்தனில் நிந்தையுண்டாம்
உபாயமாய் சிலபேராலே விரோதமும் கலகமாகும்
காயமே யருந்தபோதும் கடவுளை மறந்திடாதே.
வாயவே யிரண்டுமாறும் வருத்தமே இரண்டும் வீழந்;தால்
தோயவே பொருளும் நஷ்டம் தொழில்தனில் நிந்தையுண்டாம்
உபாயமாய் சிலபேராலே விரோதமும் கலகமாகும்
காயமே யருந்தபோதும் கடவுளை மறந்திடாதே.
உனக்கு இரண்டும், ஆறும், இரண்டும்
விழுந்ததால் வருத்தமுண்டாகும்.
பொருள் நஷ்டமும் தொழில் முடக்கம் உண்டாகும். சில பேர்களால் உனக்கு கலகமும் விரோதமும் உண்டாகும். ஆனால்
எத்தகைய துன்பம் நேரிடினும் கடவுளை மறவாதே, உன்
கஷ்டமெல்லாம் நீங்கிப் போகும் என்கிறார்.
2,6,3.
முறைந்திட்டோர் சேகரித்த மண்மனை வந்துசேரும்.
இரண்டுடனாறும் மூன்றும் இணங்கிட செல்வமோங்கும்
சிறந்திடும் நாற்கால் ஜீவன் சீக்கிரம் யெண்ணம் கூடும்.
துறந்துமே சென்றேபேரும் துரிதத்தில் வருகுவாரே.
இரண்டும், ஆறும், மூன்றும்
விழுந்தால் பெரியோர்கள்
தேடிய மனைபூமி நிலம் முதலியவைகள் சேரும். செல்வமானது ஓங்கும். நாற்கால் ஜீவன் கொள்ள பால்
பாக்கியம் உண்டாகும். எண்ணமும் சீக்கிரத்தில் கூடும். கவலையடைந்து மனைவிட்டு சென்றோர்களும்
வந்து சேருவார்கள் என்கிறார் அகத்தியர்.
2,6,6.
வாரென யிரண்டீராறும் வந்திடில் கெடுதியப்பா
நேரவே எடுத்தவேலை நிதானமே மிகந்துகூடும்
பாரது மூளுமப்பா பொரந்திய குடும்பந்தன்னில்
தேரவே வழியண்டு துதித்திடாய் தெய்வந்தன்னை
இரண்டும், இருமுறை ஆறும்விழ எடுத்தவேலைகள் எதுவாயினும் நிதானமாகவே கூடும். மனையில் சண்டை
நடக்கும்.பலவித கவலையுண்டாகும். ஆனால் உனது குலதெய்வத்தையோ நவக்கிரகத்தையோ பூஜை செய்ய
நன்மையுண்டாகும் என்கிறார் அகத்தியர்.
3,1,1 முத்ல் 3,6,6 வரையிலான பலன்கள்..
3,1,1.
தெய்வீகத் தன்மையாலே தேர்ந்து நீயடைவாய் லாபம்
பையமூன்றிரொன்றாக பாலனே விழுந்ததாலே
வையகந்தனிலுனக்கு வாழ்விலே பின்னமில்லை
செய்யவே தொழிலுமோங்கும் தீர்க்கமாய் ஆயுளுண்டாம்.
தெய்வீகத் தன்மையாலே தேர்ந்து நீயடைவாய் லாபம்
பையமூன்றிரொன்றாக பாலனே விழுந்ததாலே
வையகந்தனிலுனக்கு வாழ்விலே பின்னமில்லை
செய்யவே தொழிலுமோங்கும் தீர்க்கமாய் ஆயுளுண்டாம்.
பாய்ச்சிகையை உருட்டும் போது ஒருமுறை மூன்றும் இருமுறை ஒன்றும்
விழுந்ததால் தெய்வ பக்தியினால் வேண்டிய லாபங்களை அடைவாய். குடும்பத்திலும் தொழிலிலும் எவ்வித குறையும்
ஏற்படாது. தீர்க்கமான ஆயுளுண்டாகும் என்கிறார்.
3,1,2.
ஆயுளும் அற்பமில்லை அவனியில் நன்மையில்லை
தோயமூன்றொன்று ரெண்டும் தொகுத்த தாலல்லாபமில்லை
சேயரும் பெண்டீருந்தன் சொல்தனை மதிப்பதில்லை
சகாயமு மொருவரில்லை சஞ்சலம் கொஞ்சநாளே.
ஆயுளும் அற்பமில்லை அவனியில் நன்மையில்லை
தோயமூன்றொன்று ரெண்டும் தொகுத்த தாலல்லாபமில்லை
சேயரும் பெண்டீருந்தன் சொல்தனை மதிப்பதில்லை
சகாயமு மொருவரில்லை சஞ்சலம் கொஞ்சநாளே.
மூன்றும், ஒன்றும், இரண்டும் விழுந்ததால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறாது. மனைவி மக்களின் வெறுப்புக்கும்,
புறக்கணிப்புக்கும் ஆளாக நேரிடும். உதவிக்கு
யாருமில்லாத நிலையும், உடல்
நோவும் வாட்டும். எல்லாக் கவலைகளும் சில நாளில் நீங்கும் என்கிறர்.
3,1,3.
கொஞ்சவே மூன்றுமொன்றும் மூன்றுமே விழுந்ததாலே
சஞ்சலமொழிந்து போச்சு சகலமும் நன்மையாச்சு
வஞ்சகம் செய்தபேர்கள் வகையற்று ஒழியலாச்சு
அஞ்சாதே நீ செய்வதெல்லாம் அடைகுவாய் லாபந்தானே.
உனக்கு மூன்றும், ஒன்றும், மூன்றும் பாய்ச்சிகையில் விழுந்ததால் கவலைகள் எல்லாம் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.
வஞ்சகம் செய்தவர்கள்
அழிந்து போவார்கள்.அஞ்ச வேண்டாம்,இனி
நீ செய்வதெல்லாம் நன்மையாகவே முடியும்.
3,1,6.
லாபமில்லை மூன்றொன்றாறில் நஷ்டமேயாகும்பாரில்
ஆபத்தும் சினேகராலேயாகிவிட மர்க்கமுண்டு
கோபத்தைக் கைக்கொள்ளாதே கொடுமைகள்மிகுமே
சோபிதம் குறைந்துபாரில் துன்பமும்மிகவுண்டாமே
லாபமில்லை மூன்றொன்றாறில் நஷ்டமேயாகும்பாரில்
ஆபத்தும் சினேகராலேயாகிவிட மர்க்கமுண்டு
கோபத்தைக் கைக்கொள்ளாதே கொடுமைகள்மிகுமே
சோபிதம் குறைந்துபாரில் துன்பமும்மிகவுண்டாமே
உனக்கு மூன்றும் ஒன்றும் ஆறும் பாய்ச்சிகையில் விழுந்ததால் சினேகிதரால்
ஆபத்துக்கள் நேரலாகும். ஆனால் நீ கோபத்தைப் பாராட்ட வேண்டும். கிரகத்தின் கோளாறினால் உனது குணமும்
கெடும் மாறுதலடையும். எந்த வித லாபமும் கிட்டாமல் அதிக துன்பமுண்டகும்.
3,2,1.
மிகமிக துயரங்காட்டும் மூன்றிரெண்டொன்றும் வந்தால்
பசுகமது ஒழிந்துபோகும் சொல்மொழி தவறலாகும்
கையதுமிகவே நேரும் பயங்கர நோயுண்டாகும்
வகையற்று பொருளிழந்து வறுமையால் வாடுவாயே.
மூன்று, இரண்டு, ஒன்று
என விழுந்தால் மிகத் துயரத்தை உண்டாக்கும். குடும்பத்தின் சுகத்தை கெடுக்கும். கொடுத்த வாக்கு தவறிப்போகும். பகையும்,
கடுமையான நோயும் உண்டாகும். கைப்பொருள்
விரையமுண்டாகும் என்கிறார்.
3,2,2.
வாடவே வேண்டாமப்பா வந்தது நல்லகாலம்
நீடவே மூன்றிரெண்டும் நிஷ்டூர மொழிந்து போகும்
தேடவேபோன ஜீவன் தெற்கெனும் திசையில்கிட்டும்
பாடலாமிதனை நம்பி பலன்பெற்று ஜீவிப்பாயே
வாடவே வேண்டாமப்பா வந்தது நல்லகாலம்
நீடவே மூன்றிரெண்டும் நிஷ்டூர மொழிந்து போகும்
தேடவேபோன ஜீவன் தெற்கெனும் திசையில்கிட்டும்
பாடலாமிதனை நம்பி பலன்பெற்று ஜீவிப்பாயே
ஒருமுறை மூன்றும் இருமுறை இரண்டு விழ இனி நன்மையான பலன்களெல்லாம்
ஏற்படும். தேடிப்போன ஜீவன் தெற்கு திசையிலே எதிர்பாராதவிதமாய் கிடைக்கும். இனி உன் கவலைகள்
நீங்கி உலகில் சுகமாக வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.
3,2,3.
ஜீவிய காலமெல்லாம் வறுமையால் வாடி நின்றாய்
பாவிகள் சிலபேராலே பலவித பொருளைத் தோற்றாய்
ஆவியை ஒழிப்பதற்கும் யோசிப்பார் கவனம் வைப்பாய்
சேவித்தே ஈசன் தன்னை ஜெகமதில் வாழ்வாய் முன்னே.
ஜீவிய காலமெல்லாம் வறுமையால் வாடி நின்றாய்
பாவிகள் சிலபேராலே பலவித பொருளைத் தோற்றாய்
ஆவியை ஒழிப்பதற்கும் யோசிப்பார் கவனம் வைப்பாய்
சேவித்தே ஈசன் தன்னை ஜெகமதில் வாழ்வாய் முன்னே.
மூன்றும், இரண்டும், மூன்றும் விழுந்திருப்பது உன் கஷ்ட நிலையினையே காட்டுகிறது. தீயவர்களினால் உன்
பொருளை இழந்திருப்பாய். அவர்களினால் உன் உயிருக்கும் ஆபத்துண்டு. கவனமாய் இரு!,
எல்லாம் வல்ல ஈசனை வணங்கி நலமாய் வாழ்ந்திடு
என்கிறார்.
3,2,6.
முன்கால வினையிதென்று மூர்க்கமாய் திரியவேண்டாம்
உன்காலம் நல்லதாச்சு விழவும் மூன்றிரண்டுமாறும்
பின்னால் நீ வேணலாபப் பயிர்த்தொழில் செழித்துவோங்கும்
ஒன்றுக்கும் அஞ்சிடாதே ஒருவாரம் கழிந்திடாயே.
மூன்றும், இரண்டும், ஆறும் விழுந்திருப்பதால் உனக்கு நல்ல நேரம் உண்டாகியிருக்கிறது. இது உன்
முன்வினை பயனால் வந்தது என இருமாந்து இருந்து விடாதே. இனி வரும் நாட்களில் உனக்கு
விவசாயம் செழித்து லாபம் பெருகும் என்கிறார்.
3,3,1.
குழித்திடாய்யிரு மூன்றொன்றும் கருத்துடன் விழுந்ததால்
பத்தவர் பாழாய் போவார் இழித்தவர் இடர்க்குள்ளாவார்
செழிக்குமுன் குடும்பமப்பா சேரும் பொன் பூஷணங்கள்
அழித்ததோர் பொருளும் சேரும். அன்பு கொண்டிருந்திடவே.
குழித்திடாய்யிரு மூன்றொன்றும் கருத்துடன் விழுந்ததால்
பத்தவர் பாழாய் போவார் இழித்தவர் இடர்க்குள்ளாவார்
செழிக்குமுன் குடும்பமப்பா சேரும் பொன் பூஷணங்கள்
அழித்ததோர் பொருளும் சேரும். அன்பு கொண்டிருந்திடவே.
இரண்டு முறை மூன்றும் அடுத்து ஒன்றும் விழ உன்னை பழித்தவர் அழிந்து
போவார்கள், எதிரிகள் துயருக்கு
ஆளாவர்கள். பொன், பொருள் சேர புகழுடன்
வாழ்ந்திருப்பாய் என்கிறார் அகத்தியர்.
3,3,2.
கோண்டதோர் கவலையாலே குன்றியே வாடுகின்றாய்
இன்றிரு மூன்றும் ரெண்டும் வீழ்ந்ததால் பொருளும் நஷ்டம்
அண்டொணா துயர்க்குள்ளாக்கும் அபலமாய் எண்ணம்
கண்டாலும் விஷம் போல் பார்ப்பார் கஷ்டமும் துயர முண்டாம்.
கோண்டதோர் கவலையாலே குன்றியே வாடுகின்றாய்
இன்றிரு மூன்றும் ரெண்டும் வீழ்ந்ததால் பொருளும் நஷ்டம்
அண்டொணா துயர்க்குள்ளாக்கும் அபலமாய் எண்ணம்
கண்டாலும் விஷம் போல் பார்ப்பார் கஷ்டமும் துயர முண்டாம்.
முதல் இரண்டு முறை மூன்றும் அதனையடுத்து இரண்டு விழுந்திருப்பது உன்
துயர நிலையை குறிக்கிறது. உறவுகள் வெறுத்து ஒதுக்குவர். மனக்
கவலையும், பொருள் விரயமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
3,3,3.
குண்டாலும் அஞ்சுவார்கள் கருத்துடன் முன்மூன்றானால்
விண்டாலும் சபைநடுங்க வேணவே தனமும் சேரும்
செண்டாலும் சிறுவராலே சீமான்போல் வாழ்வுண்டாகும்
கொண்டாடும் குலதெய்வங்கள் குதிகொள்ளும் உந்தனுக்கே.
மூன்று முறை மூன்று வீழ்ந்தால் இனி உனக்கு நல்ல காலம் என்பதாகிறது.
பெரிய சபைகளில் உனக்கு மரியாதை உண்டாகும். எதிரிகள் அஞ்சி நடுங்குவர். உன் வாரிசுகளினால் செல்வம்
குவியும். செல்வ சீமானாய் வாழ்க்கை அமையும் குலதெய்வங்கள் உனக்கு துனையாக இருக்கும்
என்கிறார்.
3,3,6.
உந்தனின் கிரகமெல்லாம் வக்கரமாச்சுதப்பா
சொந்தமாய் தொழில் செய்தாலும் சோங்கியே போகுமப்பா
விந்தையாய் இருமூன்றாறும் வந்ததால் கவலையப்பா
சிந்தனை மிகவேநேரும் ஜீவன்கள் நஷ்டமாமே.
முதல் இரண்டு தடவைகள் மூன்றும், அடுத்து ஆறும் விழுந்தால் உனது நல்ல கிரகங்கள் எல்லாம்
வக்கரித்த நிலையில் இருப்பதை காட்டுகிறது. சொந்த தொழில் சிதையும், கவலைகள் சூழும். குடும்பத்தில் உயிரிழப்புகள் உண்டாகும் என்கிறார்.
3,6,1.
நஷ்டமே மிகவுண்டாகும் நலமில்லை மூன்றாரொன்றில்
இஷ்டம்போல் நடப்பாயானால் இடரது மிகவேநேரும்
கஷ்டமாம் குடும்பந்தன்னில் கைப்பொருள் விரையமாகும்
துஷ்டரால் துடுக்கும்நேரும் சலிப்பது அதிகமாகவே.
நஷ்டமே மிகவுண்டாகும் நலமில்லை மூன்றாரொன்றில்
இஷ்டம்போல் நடப்பாயானால் இடரது மிகவேநேரும்
கஷ்டமாம் குடும்பந்தன்னில் கைப்பொருள் விரையமாகும்
துஷ்டரால் துடுக்கும்நேரும் சலிப்பது அதிகமாகவே.
மூன்றும், ஆறும், ஒன்றும்
விழ நஷ்டமே உண்டாகும். தன்னிச்சையாக செயல் பட்டால் மனத் துயரும், கைப் பொருள் விரயமும், எதிரிகளினால் ஆபத்தும் உண்டாகும் என்கிறார்.
3,6,2.
அதிகமாய் கவலைவேண்டாம் அதிர்ஷ்டமுமுனக் குண்டாச்சு
பதிதனில் மிகவுமேன்மை பாக்கிய மடையப்போராய்
கதியென வடைந்தபேரை பாத்து ரஷிப்பாய் நீ தான்
நிதியுடன் ஏழைகட்கு நிகழ்த்துவாய் தர்மந்தன்னை.
பாய்ச்சிகை உருட்டிடும் பொழுதில் அடுத்தடுத்து மூன்றும், ஆறும், இரண்டும் விழ இனி வரும் நாட்களில் உனக்கு நன்மையுண்டாகும். மேலான நிலைகளை அடைவாய்.
தஞ்சமென வருவோரை காத்து ரட்சிப்பாய். ஏழைகளுக்கு உன்னால் இயன்ற தர்மத்தை செய்து வர
நன்மை உண்டாகும் என்கிறார்.
3,6,3.
தன்னையே நோகச் செய்யும் தரித்திர திசையுண்டாகும்
பின்னும் மூன்றாறு மூன்றும் பிழையுற விழுந்ததாலே
ஒன்றுமே புலப்படாது உன்தொழில் பொருளும் நஷ்டம்
துன்பமாய் நோயுண்டாகும் துலைந்திடும் மாதமொன்றில்
மூன்றும், ஆறும், மூன்றும்
வீழ்ந்தால் உனக்கு மிகவும் தரித்திரம் உண்டாகும். புத்தி செயலிழந்து தொழில் முடக்கம் உண்டாகி
பொருள் விரையமும்
ஏற்படும். நோயும் உண்டாகும். இவையனைத்தும் ஒரு மாதத்தில் நீங்கிடும் என்கிறார் அகத்தியர்.
3,6,6.
ஒன்றுக்கு மஞ்சிடாதே ஒரு மூன்று யிராறானால்
நன்றப்பா நினைப்பதெல்லாம் நடந்திட ஜெயமேகாணும்
இன்றுடன் உனது பீடையிடர்களுமொழிந்து போச்சு
ஊன்மனைதனில் விவாகம் உறுதியாய் கூடும்பாரே.
ஒன்றுக்கு மஞ்சிடாதே ஒரு மூன்று யிராறானால்
நன்றப்பா நினைப்பதெல்லாம் நடந்திட ஜெயமேகாணும்
இன்றுடன் உனது பீடையிடர்களுமொழிந்து போச்சு
ஊன்மனைதனில் விவாகம் உறுதியாய் கூடும்பாரே.
மூன்றும் அதையடுத்து இரண்டு ஆறும் வீழ்ந்தால்
இனி நீ
நினைப்பதெல்லாம் ஜெயமாகும் என்கிறார் அகத்தியர். இன்றுடன் உன்னை பிடித்திருந்த தீயவைகள் விலகி விரைவில்
உனது இல்லத்தில் திருமணம் ஒன்றும் நடைபெறும் என்கிறார்.
6,1,1 முதல் 6,2,6 வரையிலான பலன்கள்..
6,1,1.
கூடுமென்றே நினைத்து குதூகல மடைந்திடாதே
நாடிய வாறீரென்றும் நஷ்டமேயாகுமப்பா
பாடுபட்டே நீ சேர்த்த பொருளது ஒழியுமப்பா
வாடிடவேண்டா மின்னும் வாரமிரெண்டேக வேணும்.
கூடுமென்றே நினைத்து குதூகல மடைந்திடாதே
நாடிய வாறீரென்றும் நஷ்டமேயாகுமப்பா
பாடுபட்டே நீ சேர்த்த பொருளது ஒழியுமப்பா
வாடிடவேண்டா மின்னும் வாரமிரெண்டேக வேணும்.
ஆறும், அடுத்தடுத்து இரண்டு முறை ஒன்றும் விழுந்திருப்பதால் நன்மை உண்டாகுமென
குதூகலமடையாதே. பாடுபட்டு சேர்த்த பொருள் அழியும். இரண்டு வாரம் கழிந்தால் நன்மை
உண்டாகும் என்கிறார்.
6,1,2.
வேணமென்றே நீ செய்யும் வேலையில் லாபமுண்டாம்
பூணுமாரொன்றும் ரெண்டும் புகழுறவிந்தாலே
தோணுமே பலிக்குமெண்ணம் தொந்தார்த்தமொழிந்து போகும்
காணுவாயிதனினுண்மை கந்தனின் கருணையுண்டாம்.
ஆறும், ஒன்றும், இரண்டும் வீழ்ந்ததால்
செய் தொழிலில்
லாபமுண்டாகும். மனதில் நினைத்த எண்ணமெல்லாம் பலிக்கும். குடும்பத்திலுள்ள தொந்தார்த்தங்க ளெல்லாம்
ஒழிந்து போகும். இன்னும் சில நாளில் இதனுண்மை காண்பாய் என்கிறார்.
6,1,3.
கருணையு முனக்குயேது கிரகங்களெல்லாம் தீது
ஆறு ஒன்றும் மூன்றும் விழ அதிர்ஷ்டமும் போச்சுதப்பா
பொருளது விரையமாகும் பொல்லாப்பு அதிகமாகும்
உருபடாதுந்தன் செய்தி ஒன்றுக்கும் மஞ்சிடாதே.
ஆறம், ஒன்றும், மூன்றும்
விழுந்தால் உந்தன் எண்ணம் பலிதம் ஆகாது. கைப்பொருள் விரையமாகும். பொல்லாப்பு அதிகரிக்கும்,
நீ எண்ணிய எண்ணங்கள் உருப்படாது இருந்தாலும் அஞ்சாதே
என்கிறார் அகத்தியர்.
6,1,6.
அஞ்சிடவேண்டாமப்பா ஆறும் ஒன்றாலும் வீழ்ந்தால்
வஞ்சகம பீடை நோயும் வறுமையும் ஒழிந்துபோகும்
துஞ்சவே தானியங்கள் துணைவரும் வந்து சேர்வார்
கொஞ்சநாள் போனதானால் கொடுக்கல்வாங்கலிலே லாபம்.
அஞ்சிடவேண்டாமப்பா ஆறும் ஒன்றாலும் வீழ்ந்தால்
வஞ்சகம பீடை நோயும் வறுமையும் ஒழிந்துபோகும்
துஞ்சவே தானியங்கள் துணைவரும் வந்து சேர்வார்
கொஞ்சநாள் போனதானால் கொடுக்கல்வாங்கலிலே லாபம்.
உனக்கு ஆறும், ஒன்றும், ஆறும் விழுந்ததால் உனைத் தொடர்ந்த பீடையும், நோயும், வறுமையும்,
வம்பு வழக்குகளும், பகைவர்களின் வஞ்சமும் ஒழியும். நிலம் செழித்து தானிய விளைச்சல்
பெருகும். புதிய சினேகிதர்களும் சேருவார்கள். அதனால் லாபமுண்டாகும் என்கிறார்.
6,2,1.
பாங்கவே மனையும்மாடும் ஆறுரெண்டொன்றால் லாபம்
ஓங்குமே சிறுவர்கட்கு உயர்தரக் கல்வியெல்லாம்
பாங்குள மனையைவிட்டு பரதேசம் போனபேரும்
தேங்கிடா வந்தேசேர்வார் தீர்ந்திடும் உனது துன்பம்
ஆறும், இரண்டும், ஒன்றும்
விழுந்ததால் எந்த காரியத்திலும் நல்ல லாபமுண்டாகும். குடும்பத்தில் சிறுவர்களுக்கு கல்வி
ஞானமும் ஓங்கும்.
சொந்தமாய் வீடும், கால்நடைகளும்
அமையும். மனங்கலங்கிச் சொன்றவராயினும் சீக்கிரத்தில் வீடுவந்து சேருவார்கள். உனது கவலைகள்
ஒழியும் என்கிறார் அகத்தியர்.
6,2,2.
துன்பமே மிகவுண்டாகும் தொகுத்தாறு மீறிரெண்டால்
அன்பு பேரானால் அடுத்துமே பகையுமாவார்
நன்றி நீ செய்தபோது நலமொன்றும் ஏற்படாது
தன்மையுமழிந்து போகு தரித்திரனாக்குமாமே.
இப்பொழுது ஆறும் அடுத்தடுத்து இரண்டும்
வந்ததால் அன்புள்ள
சினேகிதர் ஆயினும் பகையாவார்கள். நீ நன்மையை செய்தாலும் அதனால் நலம் ஏதும் விளையாது. உனது தன்மை அழிந்து
தரித்திரம் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
6,2,3.
ஆக்குமே தனவானாக ஆறிரெண்டு மூன்று வீந்தால்
போகுமே கவலையெல்லாம் பொன் பொருள் மிகவே சேரும்
தேக்குமே உனக்கு நன்மை தேகத்தின் பிணியும் நீங்கும்
நோக்குமே நன்மையாக நல்லதோர் கிரகமெல்லாம்.
ஆறும், ரெண்டும், மூன்றும்
வீழ்ந்ததால் இந்த அமைப்பு உன் கவலையெல்லாம் அகற்றி செல்வத்தை கொண்டு தரும்.நோய் நொடிகள் விலகிடும்.கிரக
அமைப்புகளினால் நலமுண்டாகும் என்கிறார்.
6,2,6.
கிரகத்தின் கோளாறின்று காட்டிடும் கவலையாலே
உரமுள்ள ஆறும் ரெண்டும் உடனாறும் வீழ்ந்ததப்பா
பரபரப்பதிகமாகும் பாவியென்ற சுவர்கள்
சிறப்புடன் சிலநாள் போக சேமமே பெறுகுவாயே.
ஆறும், இரண்டும், ஆறும்
விழுந்ததால் கிரக கோளாறின் காரணமாய் கவலையும், பதட்டமும் அதிகரிக்கும். நற்பெயருக்கு களங்கமுண்டாகும். இந்த நிலமை சில நாளில்
மாறிடும் என்கிறார் அகத்தியர்.
6,3,1 முதல் 6,6,6 வரையிலான பலன்களும்,
6,3,1.
பெருகிடும் குடும்பந் தன்னில் வறுமையே மிகவுண்டாச்சு
குரும்பர்கள் கலகமாச்சு கோளாறு மூன்றோன்றாச்சு
உரிமையாய் செயவியாபாரம் உனக்கிப்போ நஷ்டமாச்சு
பொருளது அழிவதற்கு பொல்லாத பிணியுண்டாச்சு
பெருகிடும் குடும்பந் தன்னில் வறுமையே மிகவுண்டாச்சு
குரும்பர்கள் கலகமாச்சு கோளாறு மூன்றோன்றாச்சு
உரிமையாய் செயவியாபாரம் உனக்கிப்போ நஷ்டமாச்சு
பொருளது அழிவதற்கு பொல்லாத பிணியுண்டாச்சு
உனக்கு ஆறும், மூன்றும், ஒன்றும் வீழ்ந்திருப்பது செய்தொழில் முடக்கமாகி வறுமை அதிகமாகும் என்பதை
குறிக்கிறது. நோய் நொடியினால் கைப் பொருள் அழியும். தீயவர்களினால் வீணான பிரச்சினைகள்
உருவாகும் என்கிறார்.
6,3,2.
ஆச்சப்பா நல்லகாலம் அப்பனே வருகலாச்சு
தாஷிதானில்லையாறும் தனிமூன்றும்ரெண்டும் வீழ்ந்தால்
போச்சப்பா கவலையெல்லாம் போனெதோர் பொருளும்சேரும்
மாஷியாய் வாழ்வாய் நீதான் மக்களை பெற்றுகந்தே
ஆறும் மூன்றும் இரண்டும் வீழ்ந்திருக்கும் இந்த அமைப்பு
உனக்கு நல்ல காலம் வருவதை குறிக்கிறது. பொன்னும் பொருளும் சேர புத்திர பாக்கியத்துடன்
நிறைவாய் வாழ்ந்திடுவாய் என்கிறார் அகத்தியர்.
6,3,3.
அந்தோவுன் கிரகமெல்லாம் ஆச்சுதுநீசமாக
சந்தோஷம் மழியாமலாகும் தனித்தாறு மிருமுன்றுமானால்
நிந்தைகள் மிகவுண்டாகும் நிஷ்கடூரக்காரனாகும்
வந்தநோய் வைத்தங்காட்டும் வலிசண்டை பலவுண்டாமே.
அந்தோவுன் கிரகமெல்லாம் ஆச்சுதுநீசமாக
சந்தோஷம் மழியாமலாகும் தனித்தாறு மிருமுன்றுமானால்
நிந்தைகள் மிகவுண்டாகும் நிஷ்கடூரக்காரனாகும்
வந்தநோய் வைத்தங்காட்டும் வலிசண்டை பலவுண்டாமே.
பாய்ச்சிகை உருட்டலில் முதலில் ஆறும் அடுத்தடுத்து இரு முறை
மூன்றும் விழுந்திருப்பது உனக்கு கெடுதலையே தரும். அவப் பெயரையும், குடும்பத்தினர் ஆதரவை இழக்கவும் வைக்கும். வலுச்
சண்டைகளும்,நோயினால் கடுமையாக பாதிக்கப்
படும் வாய்ப்புகள் உண்டு என்கிறார்.
6,3,6.
புலவித கவலைவேண்டாம் பகர்ந்தாறும் மூன்றாறானால்
நலமது மிகவேயுண்டு நம்பியதெல்லாம் லாபம்
கலகங் ளொழிந்து போகும் கங்கண ப்ராப்தமாகும்
வலப்பக்க மச்சம்காணும் வர்த்தகம் விர்த்தியாமே.
ஆறும் மூன்றும் ஆறும் விழுந்ததால்
இனிக்கஷ்டமென்ற கவலையே வேண்டாம். எண்ணிய எண்ணம் நிறைவேறும். கலகம் ஒழிந்து களிப்பு
பெருகிடும். வலது
பக்கத்தில் இருக்கும் மச்சத்தினால் உனக்கு அதிர்ஷ்டங்கள் உண்டு என்கிறார் அகத்தியர்.
6,6,1.
விர்த்தியாய் நிலஞ்செழிக்கும் நீரதுசுரக்கும் கேணி
தற்போது ஈராறொன்றால் தழைத்துமே செழித்துவாழ்வாய்
அற்பமாய் நினைத்திடாதே அகஸ்தியா வாக்கியத்தை
சொற்படி யெல்லாம் நடக்கும் சுடடிராளி முருகன்சாக்ஷி.
விர்த்தியாய் நிலஞ்செழிக்கும் நீரதுசுரக்கும் கேணி
தற்போது ஈராறொன்றால் தழைத்துமே செழித்துவாழ்வாய்
அற்பமாய் நினைத்திடாதே அகஸ்தியா வாக்கியத்தை
சொற்படி யெல்லாம் நடக்கும் சுடடிராளி முருகன்சாக்ஷி.
உனக்கு ஈராறும் ஒன்றும் வந்ததால் உனக்கு விளைச்சல் பெருகி அதனால்
செழித்து வாழ்வாய். இந்த வாக்கினை அற்பமாய் நினையாதே இதற்கு முருகப் பெருமானே சாட்சி என்கிறார்.
6,6,2.
சாக்ஷியே சாதிப்பாகும் சங்கடம் மிகவேநேரும்
சூக்ஷியாய் துரோகம் செய்வர் ஈறாதுமிரண்டும் விழ
மாகடஷிசேர் தொழிலும் போகும் மக்கட்கு பீடைகாட்டும்
ஆக்ஷியாய் எல்லாம் நஷ்டம் அகஸ்தியருரைத்தவாக்கே.
ஈராறும் ஓன்றும் விழுந்ததால் துயரமே மேலிடும். துரோகங்களை சந்திக்க
நேரிடும். தொழில் சிதையும்.குடும்பத்தினருக்கு நோய் நொடி உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
6,6,3.
வாக்கது தப்பாதப்பா விழுந்த நீராறுமூன்றும்
போக்கிய தொழிலும் செல்வம் ஜீவனும் வந்துசேரும்
பாக்கியம் மிகவும் பெற்று பலவித மேன்மையாவாய்
நோக்குவாய் மூதோர்வாக்கை நம்பி நீ வாழ்குவாயே.
உனக்கு ஈராறும் மூன்றும் விழந்ததால் கைவிட்டுப்போன தொழில்,
செல்வம் மீள வந்து சேரும். பிரிந்தவர்கள்
தேடி வருவர். எல்லா வகையான நன்மைகளையும் பெற்று மேன்மையடைவார் என்கிறார் அகத்தியர்.
6,6,6.
வாழ்வைக் கெடுக்க வேதான் வங்சகர் கூடஞ்சேரும்
தாழ்வுகள் மிகவேநேரும் தனிவுள மூவாறானால்
சூழ்வினையாலே உந்தன் செல்வாக்கு மழிந்துபோகும்
பாழ்பட கிரகமெல்லாம் பகையாச்சு அஞ்சிடாதே.
பாய்ச்சிகை உருட்டிட மூன்று முறையும் ஆறு விழுமாயி அது உனக்கான
நல்ல கிரகங்கள் எல்லாம் பகையாகி நிற்கிறது என்பதாகும். உன்னை
வீழ்த்த வஞ்சகர் கூட்டம்
காத்திருக்கிறது. முன்வினையினால் உனது செல்வம் அழியும். கீழான நிலைக்கு தள்ளப் படுவாய். அஞ்சிடாதே
என்கிறார் அகத்தியர். அதனால் தாழ்வுகள் ஏற்படும், செல்வாக்கும் அழியும், பலவித சேதமுண்டாகும் என்கிறார் அகத்தியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக