திருநீறு பண்டையகாலத்திலேயேமுக்கியத்துவம்பெற்றிருந்தது. திருநீறுஅணிவது சைவர்களதுஆன்மிக அடையாளச்சின்னம் என்கிற அளவில்மட்டும் எடுத்துக்கொள்ளாமல் திருநீறுஅணிவதன் உண்மையானபொருளை அறிந்து கொள்வதுஆன்மிக அன்பர்களுக்கு மிகஅவசியமாகும்.
முதலில் எரிக்கப்படும் எல்லாப் பொருள்களின் சாம்பலுமே திருநீறாககருதப்படுவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.ஆதிகாலத்தில் ஹோமத் தீயில் தனிச் சிறப்பு வாய்ந்த மரக்கட்டைகள்,நெய் மற்றும் மூலிகைகள் போடப்பட்டு கடைசியில் மிஞ்சும் சாம்பலேபுனிதத் திருநீறாகக் கருதப்பட்டது.
பிற்காலங்களில் ஹோமத்தீயின் மூலமாக மட்டும் அல்லாமல் பசுவின்சாணம் மற்றும் சில பிரத்தியேகப் பொருட்கள் கலந்த கலவையின்சாம்பலும் திருநீறாக பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. திருநீறு அணிவதற்குஆன்மிகம் மற்றும் அறிவு பூர்வ மான காரணங்கள் இருக்கின்றன.முதலில் ஆன்மிக காரணங்களைப் பார்ப்போம்.
திருநீறு நிலையாமையை உணர்த்தும் அரிய பொருளாய் உள்ளது.அதாவது இறைவன் கொடுத்திருக்கின்ற இந்த மானிட உடலானதுஉறுதியாய் ஒரு நாளைக்கு இத்திருநீற்றைப் போன்று சாம்பலாய்ப்போகும்,அதை மறந்து விடாமல் தூய்மையாக, அறநெறியில்இறைச்சிந்தனையோடு வாழ வேண்டுமென ஒவ்வொரு கணமும்உணர்த்தும் விதமாக திருநீறு அணியப்படுகிறது.
மேலும் ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின்எஞ்சுவது இது தான் என்பதையும் திருநீறு குறிக்கின்றது. இப்படிஅணிகிறவர்களுக்கும், அதைப் பார்க்கிறவர்களுக்கும் பெரும் தத்துவத்தைநினைவுபடுத்துவது திரு நீறு அணிவதன் முக்கிய நோக்கம். திருஞானசம்பந்தர் பாண்டிய மன்னன் கூன்பாண்டியனின் நோயைத் திருநீறு பூசிப்போக்கியதாக கூறப்படுகிறது.
திருநீற்றை முறையாக உச்சி, நெற்றி, மார்பு, நாபி, வலது முழந்தாள்,இடது முழந்தாள், வலது தோள், இடது தோள், வலது முழங்கை, இடதுமுழங்கை, வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, வலது விலா, இடதுவிலா, முதுகு, கழுத்து என்று பதினாறு இடங்களில் அணிய வேண்டும்என்று சைவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
இதன்வழியாக இறைவனே நம் உடல் முழுவதையும் காக்கின்றான்என்பது அன்றைய சைவப் பெரியார்களின் கருத்தாக இருந்தது. ஆனால்குறைந்தபட்சம் நெற்றியிலாவது திருநீறு அணியும் வழக்கம் இன்று வரைதொடர்கிறது.
திருநீறு பூசுவதன் தத்துவங்களைப் புரிந்து கொண்டு முறையாக செய்தால்நம் சிந்தனைகள் சீர்படும், மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாகவும்தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்,தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், பாவங்கள் எனவரையறுக்கப்பட்டவைகளை ஒதுக்கும் மனப்பாங்கு அமையும்என்பதெல்லாம் முன்னோர் அனுபவம்.