கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும்.
கருடனின் அழகிய இறக்கைகளே யக்ஞங்கள் என்றூம், மந்திரங்களில் சிறந்த காயத்திரியே கருடனின் கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய சிரசு என்றும், சாம வேதம் அவனுடைய உடல் என்றும் சாமவேதம் குறிப்பிடுகிறது.
எந்தந்த நாளில் கருடனை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:
ஞாயிற்றுக்கிழமை: நோய்கள் நீங்கும்
திங்கட்கிழமை : சுகங்கள் கிடைக்கும், துன்பம், துயரம் விலகும்.
செவ்வாய்க்கிழமை: துணிவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
புதன்கிழமை : வஞ்சனை கொண்டவர்கள் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி ஏற்படும்.
வியாழக்கிழமை : நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
வெள்ளி & சனி : லட்சுமி கடாட்சம் உண்டாகும்.