வெள்ளி, 27 நவம்பர், 2015

ஸ்ரீ தேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாச பெருமாள் ஆலய ஜீர்னொதாரன மஹா சம்ப்ரோக்ஷண ம்

                    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம்  கபிஸ்தலம்  அருகே  உம்பளபாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேவி  பூமி தேவி  ஸமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாச பெருமாள்  ஆலய   ஜீர்னொதாரன மஹா சம்ப்ரோக்ஷண ம் நான்கு வேதங்கள்  முழங்க யாகசால பூஜை இன்று  27-11-2015 மாலை 6-00  மணிக்கு  தொடங்கியது.



செவ்வாய், 12 மே, 2015

மச்ச சாஸ்திரம்

மச்ச சாஸ்திரம்
சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத்திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

ஆண்களுக்கான மச்ச பலன்
புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் & தனயோகம்
வலது புருவம் & மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்
வலது கண் & நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி
மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

பெண்களுக்கான மச்ச பலன்
நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்
நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை & பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்
வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு & ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை

புதன், 6 மே, 2015

எளிய மருத்துவம்




1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி,சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்துதேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டுஇரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின்உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம்மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் பங்குபனைவெல்லம் ½ பங்கு சேர்த்துஎட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலைவேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வரஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலைநிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்குகருவேம்பீர்க்குவேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து,நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும்மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறுவீக்கம்வலிக்கு
கிராம்புகற்பூரம்ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறுவீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம்சுக்கு – 100 கிராம்எடுத்து தட்டி குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி அல்லது வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கிவெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி,கால் வயிறு கீரைகாலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர்சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரைவாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால்ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிடமலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு பங்குஎலுமிச்சம் பழச்சாறு பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும்புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால்சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு கிராம்நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1நாளைக்கு முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு,சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலைகொடிவேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3நாள் காலையில் சாப்பிடக் கரப்பான்வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும்நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன்கடுக்காய் தோல் வராகன்பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்துஆவாரம்பட்டைஅறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்துவரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம்ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம்வால்மிளகு கால் பலம் பொடித்து 3வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்புசுக்கு சமஎடை கூட்டிப் பொடித்துவெண்ணெயில் போட்டு காய்ச்சிமுதல் முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம்சோம்புசர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும்நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்துஇரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயுஅண்டவீக்கம்தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூகசகசாவேம்புஇவைகளை சூரணித்து தடவை மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலைமாலை வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு கிராம் வீதம் தேன் கலந்து உண்ண நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது karrkantuthuul சேர்த்து வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும்நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு,எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலைநவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும்வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும்ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால்பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல்தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்துஇரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை கிராம் viitham 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்திஆலம்அரசுஇதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோமணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறிதேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கிசாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும்திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து கிராம் கொடுத்துவரமுறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும்பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள்இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்புகண்ணருகல்கண்வலிகண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டைசருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும்வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில்4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி பங்கும்கற்கண்டு பங்கும் சேர்த்துவேளைக்குகிராம் காலை மாலை உட்கொண்டுஅரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவரநரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம்கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க,இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

CV vs RESUME vs BIO DATA க்கு உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ளுங்கள்


CV vs RESUME vs BIO DATA மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ளுங்கள்!!



பயோ-டேட்டா (BIO-DATA) 
* ஒரு பக்க அளவில் நம் பண்புகள், பொழுதுபோக்குகள், எந்தத் துறையில் எந்தப் பிரிவில் ஆர்வம், கல்வி தகுதி அடங்கிய அறிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு ஒரு பக்கத்திற்கு மிகாமல் அளிப்பது தான் பயோ-டேட்டா!
* இது ஒருவரை பற்றிய அடிப்படை தகவல்களை அளிக்க உதவும் ஒரு சிறு அறிக்கையாக இருக்கும். இதனை பெரும்பாலும் ஒரு சந்திப்பின் போது அறிமுகத்திற்காக பயன்படுத்துவார்கள்.
* முதல் முறையாக இன்டர்வியூவிற்கு செல்லும் செல்பவர்கள் அதனை எடுத்து செல்வது தான் சிறந்தது. கல்லூரி மாணவர்கள் சிலர் ரெஸ்யூம் என்று இதனை குறிப்பிடுகிறார்கள் ஆனால் இது வெறும் பயோ-டேட்டா தான்.

ரெஸ்யூம் (RESUME) 
* ரெஸ்யூம் என்பது ஒருவரது திறன், கல்வி தகுதி, அனுபவம் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையாகும். இது ஒன்று முதல் இரண்டு பக்க அளவில் இருக்கலாம்.
* இதனை பெரும்பாலும் புதிய வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது துறை மாறி விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்தலாம்.
* இதனை பயன்படுத்துவதன் மூலம் ஒருவரது தனித்திறன், அவரது கல்வித்தகுதி அடிப்படையில் முன்னுரிமை கிடைக்க இது வழிவகுக்கும்.

CV (CURRICULUM VITAE), 
* இது சற்று பெரியது, பயோ-டேட்டா அல்லது ரெஸ்யூம்வை போல அல்லாமல் சற்று விரிவாக இருக்கும். இதில் ஒருவரை பற்றிய விரிவான சிறு விளக்கம் மற்றும் அவரது திறன், அனுபவம் பற்றிய சிறு விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
* இதனை வேலைக்கு செல்பவர் அல்லது பெரிய பதவியில் இருப்பவர் இன்னொரு நிறுவனத்தில் பெரிய பதவிக்கு விண்ணப்பிக்கும் போதும் பயன்படுத்தப்படும்.

இவை தான் இந்த மூன்று தகவல் அறிக்கைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்! இதனை தேர்வு செய்யும் போது சரியாக தேர்வு செய்தாலே உங்களை மதிப்பிடுபவருக்கு உங்கள் மீது ஒரு நல்ல அணுகுமுறையை உண்டாக்கும். அதனால் இதனை தயார் செய்யும் போது கவனமாகவும், தெளிவாகவும், புரியும்படியும் உங்கள் தகவல்களை அளிக்க பழகுங்கள்.

சனி, 14 பிப்ரவரி, 2015

முளைவிட்ட தானியங்கள்

சென்ற தலைமுறையினர் “எங்க வீட்ல இன்னைக்கு நெல்லுச் சோறு” என ஏதோ ஒரு பண்டிகை நாளில் சமைக்கப்படும் அரிசி உணவிற்காக சந்தோஷப்பட்டார்களாம்! இன்றோ அரிசி மட்டுமே பிரதான உணவு. பிற தானிய வகைகளை அடியோடு மறந்துவிட்டோம். இது ஆரோக்கியமானதா? முளைவிட்ட தானியங்களை உணவில் சேர்ப்பது குறித்து இன்று ஆங்காங்கே பேசத் துவங்கியிருந்தாலும் அதன் முக்கியத்துவங்களை அனைவரும் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. இங்கே முழுமையாய் தெரிந்துகொள்ளலாம்! முளைவிட்ட தானியங்கள் ஒரு முழுமையான உணவாக இருந்தாலும் இன்னும் ஏன் மக்கள் அதை தினசரி உணவாகப் பயன்படுத்துவதில்லை? அதன் நற்குணங்களைப்பற்றி ஏன் தெரிந்துகொள்ளவில்லை? காரணம், அவை வெகு எளிதாக, இயற்கையாக, எந்தத் தயாரிப்புச் சிரமமுமின்றி கையில் கிடைப்பதால்தான்! விதைகள், பிறக்கக் காத்திருக்கின்றன. ஆனால், முளைவிட்ட தானிய வகைகளோ, உயிரோட்டத்துடன் வெடிக்கக் காத்திருக்கின்றன. பண்டைய காலங்களில், முளைவிட்ட பயறு வகைகள், தினசரி உணவின் ஒரு பாகமாக இருந்தது. மனிதன் உட்கொள்ளும் எண்ணற்ற உணவுகளில், ஒரு பிடி முளைவிட்ட தானியத்தில் கிடைக்கும் சத்து, வேறு எந்த உணவின் ஒரு பிடியிலும் இருக்காது. ஒரு தானியத்தில் உள்ள வைட்டமின் சக்தி, முளைவிடும் போது பன்மடங்காகிறது. முளைவிட்ட கோதுமையில் வைட்டமின் சி, அறுநூறு சதவிகிதம் அதிகமாகிறது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் ‘சி’ அளவைவிட இது அதிகம். ஒருவரின் வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மைகொண்ட என்சைம்ஸ், முளைவிட்ட தானியத்தில் மிக அதிகமாக உள்ளது. ஒருவரின் வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மைகொண்ட என்சைம்ஸ், முளைவிட்ட தானியத்தில் மிக அதிகமாக உள்ளது. உடல் தளர்ந்துபோன நிலையில், என்சைம்ஸ் நிறைந்த முளைவிட்ட பயிரைச் சாப்பிடும்போது புத்துணர்ச்சி பிறக்கிறது. முளைவிட்ட தானியங்கள் மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரம் என்று சொல்லலாம். தானியங்கள் வருடம் முழுவதும் விளைகின்றன. அவற்றை முளைவிடச் செய்து, வருடம் முழுவதும் சாப்பிடலாம். இவற்றில் எந்த ரசாயனமும் இல்லை. சமைக்கக்கூடத் தேவையில்லை. மிகக் குறைந்த கலோரி அளவு உள்ள உணவும்கூட. அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம்! எனது பால்ய நாட்களில் என் அம்மா, பச்சைப்பயிரில் செய்த பலவகை உணவுகளை எனக்குத் தந்திருக்கிறார். அதைச் சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியமும் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும் என்பார். அப்போது அதன் அருமை எனக்குத் தெரியவில்லை. மற்ற முளைவிட்ட தானியங்களைவிட, முளைவிட்ட பச்சைப்பயிறுக்கு வயிற்றில் அதிக வாய்வை உண்டாக்காத தன்மை கொண்டது. இதனால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவு. கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி ஆகியவை மட்டுமல்ல, அளவற்ற வைட்டமின் சி-யும் நிறைந்தது, முளைவிட்ட பச்சைப்பயிறு. பச்சைப்பயிறு முளைவிடாதபோது, அதில் உள்ள ட்ரிப்சின், புரதத்தை ஜீரணம் செய்யும் என்சைம்களைத் தடை செய்கிறது. அதுவே, பயறு முளைவிட்டதும் அதில் உள்ள ட்ரிப்சின் (trypsin) குறைகிறது. முளைவிட்ட பயிரை வேகவைக்கும்போது, ட்ரிப்சின் முற்றிலும் நீங்கிவிடுகிறது. வேகவைப்பதால், இதில் உள்ள புரதச் சத்து குறைவதில்லை. முளைவிட்ட தானியத்தைத் தயார் செய்ய, தண்ணீரும் காற்றுமே போதுமானது. தானியத்தை நீரில் ஊறவைத்தால், அரை நாளில் அவை முளைவிடத் தொடங்கும். இப்போது சாப்பிடத் தயார். இதைத் தவிர, வேறு எந்தச் சிரமமும் இல்லை. நறுக்குவதோ, தோல் சீவுவதோ அவசியமில்லை. பிறகு உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். இதைக்கொண்டு எளிதில் தயாரிக்கப்படும் சாலட் மற்ற உணவுகளுடன் சேர்த்துச¢ சாப்பிட நன்றாக இருக்கும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் குக்கிராமங்கள் வரை, முளைவிட்ட பயிறு எளிதில் கிடைக்கும். மற்ற உணவுகளைவிட மிகக் குறைந்த விலையில் கிடைத்தாலும், தனது சத்துக்களால் அனைத்தையும்விட மிக அதிக அளவில் சிறப்பாக இருக்கின்றன முளைவிட்ட தானியங்கள்!

Read more at : ஏன் சாப்பிட வேண்டும் முளைவிட்ட தானியங்களை?! http://tamilblog.ishafoundation.org/en-saapida-vaendum-mulaivitta-dhaniyangalai/

வியாழன், 12 பிப்ரவரி, 2015

மனதை தெளிவாக்கும் மிக சிறந்த பாடல் வாிகள்

என் மனதை பிழிந்த அந்த பாடல் வரிகள்.

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை


பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே 


கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க


பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை
.


கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!


மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்


பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்


தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்


மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
 
Blogger Templates