PLAYER

வெள்ளி, 11 டிசம்பர், 2020

 குடும்ப அட்டையில்   குறியீடு

 NPHH : முன்னுரிமை இல்லாதவர்கள் : உங்கள் குடும்ப அட்டையில்

NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த குறியீடு இருந்தாலும் எல்லாம் பொருட்களையும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


குறியீடு NPHH-S : உங்கள் குடும்ப அட்டையில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்க முடியும் என்பதை குறிக்கும்.


குறியீடு NPHH-NC : உங்கள் குடும்ப அட்டையில் இந்தக் NPHH-NC குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை குறிக்கும்.


இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நமது தமிழ்யுகம் இணையவழி நாளிதழை பின்தொடரவும், மேலும் அனைவருக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 பாரம்பரிய நெல் ரகங்களின்  மகத்துவம்


தமிழகத்தில் பசுமைப் புரட்சிக்கு முன்பாக மருத்துவ குணமிக்க 300-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. காலப்போக்கில் அந்த ரகங்களின் பயன்பாடு குறையத் துவங்கினாலும் அவற்றின் இயல்புகளும், குணங்களும் என்றும் மாறாதவை. தற்போது அப்பாரம்பரிய ரகங்களை விவசாயிகள் மீண்டும் பயிரிடத் துவங்கியுள்ளனர்.

குடைவாழை நெல் ரகத்தின் கதிர் குடையைப் போல் விரிந்திருப்பதால் இதை குடைவாழை என்கிறோம். ஆண்டின் அனைத்து பருவத்திலும் விளையக்கூடிய குறுகிய காலப்பயிர். 5 அடிவரை வளரும். தண்ணீர் தேங்கும் இடத்தில் பயிரிடலாம். இதன் தண்டு 2.5 செ.மீ தடிமனுடன் இருப்பதால் இதன் வைக்கோலை கூரை வேய பயன்படுத்தலாம்.


மாப்பிள்ளை சம்பா ரகம்

வறட்சியை தாங்கி வளரும். 160 நாட்கள் வயதுடைய இதனுடைய அரிசி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் தன்மையுடையது. நீரழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். செரிமானத்தை துரிதப்படுத்தி தசை மற்றும் நரம்புகளுக்கு பலம் சேர்க்கும்.

125-130 நாட்கள் வயதுடைய சீரகச்சம்பா சன்ன அரிசி மற்றும் மசாலா நறுமணம் இயற்கையாகவே இருப்பதால் பிரியாணி செய்ய பயன்படும்.

கிச்சடிச் சம்பா 140 நாட்கள் வயதுடையது. பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புதிறன் கொண்டது.

இலுப்பைப்பூ சம்பா 135-140 நாட்கள் வயதுடையது. அனைத்து வகை மண் வகைகளிலும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. அரிசி சன்னமாகவும், வாசனையுடனும் இருப்பதால் பிரியாணி செய்யலாம். மூட்டுவலி, உடம்புவலி மற்றும் முடக்குவாதத்தைக் குணப்படுத்தும்.

நீளம் சம்பா 175-180 நாட்கள் வயதுடையது. நீர் தேங்கும் நிலங்களில் பயிரிடலாம். புகையான் மற்றும் கதிர் நாவாய் பூச்சிக்கு எதிர்ப்புதிறன் பெற்றது.

165 நாட்கள் வயதுடைய காடை கழுத்தான் அல்லது கருடன் சம்பா ரகத்தின் நெல் மணி கருடனின் கழுத்தைப் போல் வெள்ளைநிற வளையத்துடன் இருப்பதால் இப்பெயர். நல்ல வடிகால் வசதி உள்ள பகுதிகளில் நன்றாக வளரும்.

135- 140 நாட்கள் வயதுடைய சிவப்புக் குறுவை புகையான் மற்றும் கூண்டுப்புழு தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. வறட்சியைத் தாங்கி வளரும். இதயம், பல்லுக்கு பலம் கொடுக்கும். இரத்த ஓட்டத்தை சீர்செய்து மூட்டுவலியை குணப்படுத்தும்.


துாயமல்லி

135 - 140 நாட்கள் வயதுடையது. இதன் அரிசி மல்லிகைப்பூ போல வெண்மையாக இருக்கும். இந்த அரிசி சன்னமாக இருப்பதால் பிரியாணி செய்ய ஏற்றது. சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.


சம்பா மோசனம்

இந்த ரகம் வடிகால் வசதியற்ற நீர்தேங்கும் வயல்களிலும் நன்றாக வளரும். 160--165 நாட்கள் வயதுடையது. முற்காலத்தில் நீர் தேங்கிய வயல்களில் விளைந்துள்ள சம்பா மோசன கதிர்களை, விவசாயிகள் படகில் சென்று அறுவடை செய்ததாக வரலாறு உண்டு. இதன் அரிசி அவல் செய்வதற்கு ஏற்றது.

கருப்புநெல் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. களர் நிலத்திற்கு ஏற்றது.

பூங்கார் ரகம் 100-115 நாட்கள் வளரும். புயல், வெள்ளம், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய உயரமான ரகம். உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்கி உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும்.

கப்பக்கார் ரகம் களிமண் நிலத்தில் பயிரிடலாம். தண்ணீர் தேங்கும் நிலம் மற்றும் வறட்சியான நிலம் இரண்டிலுமே வளரும். அதிக சத்துகள் நிறைந்த அவல் செய்ய ஏற்ற அரிசி இது. வைக்கோல் கூரைவேய ஏற்றது.

கருத்தக்கார் ரகம் 105-115 நாட்கள் வயதுடையது. வறட்சியைத் தாங்கி வளரும்.

குழிவெடிச்சான் 110 நாள் வயதுடையது. வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதலை எதிர்த்து வளரும். வெள்ளத்தில் சாய்ந்தாலும் திரும்பவும் தழைத்து கதிர்விடும். இதன் அரிசி தாய்ப்பால் சுரப்பதை தூண்டுகிறது.

கருப்புக்கவனி 150-170 நாட்கள் வயதுடைய இந்த ரகம் நேரடி நெல் விதைப்புக்கு ஏற்றது. குறைவான பாசன நீரே போதும். அரிசி கருப்பு நிறத்தில் இருக்கும். எலும்பை பலப்படுத்தும். மூட்டுவலியைக் குணப்படுத்தும்.

120-125 நாட்கள் வயதுடைய கருங்குறுவை ரகம் தொழுநோயைக் குணப்படுத்தும். விஷக்கடிக்கு சிறந்த மருந்து.